அரசாங்கம் மரணதண்டனையை நிறைவேற்ற தீர்மானித்தால் அதற்கான தயார் நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூக்குதண்டனையை நிறைவேற்றுவதற்கு இரு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தூக்குதண்டனையை நிறைவேற்றுவதற்காக இருவர் வெலிக்கடை சிறைச்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் பாதுகாப்பை கருதி குறிப்பிட்ட அதிகாரி அவர்கள் பற்றிய மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலை மாத்திரமே தற்போது மரணதண்டனையை நிறைவேற்ற கூடிய ஒரு இடமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
806 கைதிகள் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ளனர் இவர்களில் 54 பேர் மரணதண்டனை தொடர்பான வழக்குகளில் தண்டனை விதிக்கப்பெற்றவர்கள் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.