அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய வங்கி அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளுக்கும் 2025 ஆம் ஆண்டின் இல. 04 என்ற சுற்றறிக்கையை நேற்று (2025.12.05) வெளியிட்டது.
வருமானம் அல்லது வியாபாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தனிப்பட்டவர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு (கடன்பாட்டாளர்கள்) நிவாரண வழிமுறைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வங்கிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.