மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்றுவந்த சிறைக்கைதி ஒருவர், வியாழக்கிழமை (14) தப்பி ஓடியுள்ளார்.
மொறக்கொட்டாஞ்சேனை, தேவபுரம் காளி கோவில் வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய பத்மராஜா தினேஷ் என்ற சிறைக்கைதியே இவ்வாறு தப்பியவராவார். நபர் ஒருவருடன் சண்டையிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இவருக்கு, நீதிமன்றம் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை (14) காலை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இவரை சிறைச்சாலைக்கு வெளியிலுள்ள கட்டுமான பணியொன்றில் மேசன் (Masan) வேலையில் ஈடுபடுத்தியிருந்தனர். அங்கிருந்தே அவர் தப்பி ஓடியுள்ளார்.
தற்போது தலைமறைவாகியுள்ள குறித்த கைதியை பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.