மஹரகம – பன்னிபிட்டிய ஹைலெவல் வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை செலுத்திய 18 இளைஞர்களை மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் பணப் பந்தயங்களை வைத்துக்கொண்டே இதனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக பயன்படுத்தப்பட்ட 11 மோட்டார் சைக்கிள்களும், முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.