அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக பொதுமக்கள் அணிதிரளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்பதற்காக மக்கள் 22வது திருத்தத்தை எதிர்க்க தயங்ககூடாது
என தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
அரசியலமைப்பின் 22வுத திருத்தம் குறித்து நாடாளுமன்றம் 24.25ம் திகதிகளில் விவாதிக்கும்.
உத்தேச அரசியலமைப்பு திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசாங்கம் நாட்டை ஒரு கட்சி ஆட்சியை நோக்கி நகர்த்த முயல்கின்றது,அரசாங்கத்திற்கு 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவிருக்கலாம் ஆனால் இந்த அரசியலமைப்பு திருத்தத்தை மக்களின் பலத்தின் மூலம் தோற்கடிக்கவேண்டும்
ஐக்கிய மக்கள் சக்தி 22வதுதிருத்தத்திற்கு எதிரான தனது போராட்டத்தை தொடரும் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.