ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (10) கூடிய “நாடே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுக் குழுவில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நச்சுப் போதைப்பொருள் அச்சுறுத்தலானது தற்போது தனிப்பட்ட உறவுகளைத் தாண்டி முழுமையான பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பையே பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதுடன், இநிலைமை மேலும் அதிகரித்துச் செல்வது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்படும் அளவற்ற செல்வத்துடன் தொடர்புடைய குற்றவியல் சூழலானது தேசிய பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக தார்மீக நெறிமுறைகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகக் சுட்டிக்காட்டப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்கள் குறித்து அஞ்சக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.