போதைப்பொருள் தடுப்பு; அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் அதிரடி நடவடிக்கை

அனைத்து அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தொன் கணக்கிலும் கிலோகிராம் கணக்கிலும் போதைப்பொருட்கள் தொடர்ச்சியாகக் கைப்பற்றப்பட்டு வரும் நிலையிலும், நாட்டில் அவை இன்னமும் பெருமளவில் புழக்கத்தில் இருப்பதை அடுத்து, போதைப்பொருளை ஒழிக்கும் நோக்குடன் அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பாவனைக்கான தேவையை முற்றாக நீக்குவதற்கும் இந்த குழுக்கள் செயற்படும். பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஊடாக அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை நாளை (17) வெளியிடப்படவுள்ளது.

இந்த சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு நிறுவனத் தலைவரும் தமது நிறுவனத்தை போதைப்பொருள் அற்ற நிறுவனமாக உறுதிப்படுத்துவது கட்டாயமாகும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அல்லது பாவனையாளர்கள் நிறுவனங்களில் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் பொறுப்பு நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, கல்விச் செயலாளர் ஊடாகவும் நாளை (17) சுற்றறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளது. இதன்மூலம், அனைத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது.

தொலைதூர கிராமப் பாடசாலைகளில் கூட போதைப்பொருள் பாவனை குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இந்த நடவடிக்கை அவசியமாகிறது. தற்போது பல இடங்களில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் வழங்க வசதியாக 1818 என்ற புதிய உதவி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய போதைப்பொருள் சபைக்கான அலுவலகம் ஒன்று எதிர்வரும் 22ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

தற்போது ஜனாதிபதி செயலகம் ஊடாக தற்காலிகமாக 1818 என்ற உதவி இலக்கம் செயற்பட்டு வருதுடன், முதல் 5 நாட்களில் மாத்திரம் சுமார் 1000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இந்தத் தகவல்களின் அடிப்படையில் தற்போது சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை