“பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை”

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை நிகழ்த்தி வரும் சூழலில், “பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில்,

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக பெண்களின் வகிபாகம் தனித்துவமானது. இந்தத் துறைகள் அனைத்திலும் பெரும் பொறுப்பைச் சுமக்கும் பெண்களின் அந்த வகிபாகத்தை பாராட்டி, பெண்களின் உரிமைகள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை இந்நாளில் குறிப்பாக நினைவுகூர்ந்தாலும், அதனை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட முடியாது என்பதை நாம் நம்புகிறோம்.

இந்நாட்டின் மக்கள் தொகையில் 52% பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் தலைமுறை, இன்று நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது இரகசியமல்ல. ஊதியம் பெறாத இல்லத்தரசிகள் என்ற வகையில் அவர்கள் மேற்கொள்ளும் வகிபாகத்திற்கு மேலதிகமாக, ஆடைக் கைத்தொழில், பெருந்தோட்டத் தொழிற்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் சேவைத் துறைகளில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்கிறார்கள்.

கடந்த 2025 ஆம் ஆண்டில் ஒரு நாடாக நாம் அடைந்த பல பொருளாதார வெற்றிகளுக்கு பெண்கள் வழங்கிய பலம் முக்கிய பங்கு வகித்தது என்பதையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். சமூக நீதிக்காக ஆண்- பெண் சமூக சமத்துவத்தை உறுதிசெய்து, பொருளாதார செயல்பாட்டில் மேலும் தீவிரமாகவும் செயற்திறனாகவும் பங்கேற்கச் செய்யும் திட்டங்களை நாம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறோம்.

நீதியான சமூகம், சுதந்திரமான நாடு மற்றும் சுதந்திரமான பெண் என்ற அபிலாஷையை அடைதல்,வீட்டிலும், போக்குவரத்தின் போதும், சமூகத்திலும், வேலைத்தளத்திலும், அரசியல் களத்திலும் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக செயல்படவும், பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் தேவையான கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் என்ற வகையில் நாம் முன்னுரிமை அளித்துள்ளோம்.

பாராளுமன்ற வரலாற்றை மாற்றும் வகையில், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மேலும், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மலையக சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒரு தனித்துவமான வரலாற்று நிகழ்வாகும்.

இந்த வகையில், நாட்டை பொருளாதார, அரசியல், மற்றும் சமூக ரீதியாக புதிய மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்ல நாம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்திற்கு சமமாக அர்ப்பணிப்புடன் செயல்படும் வலுவான மற்றும் கௌரவத்துக்குரிய பெண்களின் தலைமுறையை உருவாக்குவது எமது பொறுப்பும் உறுதிப்பாடும் ஆகும் என்பதை வலியுறுத்துகிறோம்.

மேலும், டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தில் பெண்களின் தொழில்முயற்சியை விரிவுபடுத்தி, எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதும் எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இத்தகைய சூழலில், இலங்கைப் பெண்களின் பெருமையையும் வலிமையையும் உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், ‘பெண்களின் தலைமைத்துவம் – செழிப்பான தேசத்தின் பெருமை’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஏற்பாடு செய்தமைக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தையும் நாட்டையும் விடுவித்து, ஒழுக்க நெறி மற்றும் கருணை உள்ள எதிர்காலத் தலைமுறையையும் முன்னேற்றகரமான நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக, உறுதியுடன் முன்னோக்கிச் செல்லும் எமது பயணத்தில் முன்னோடிகளாக வலுவாக கைகோர்க்குமாறு அனைத்துப் பெண்களுக்கும் அழைப்பு விடுப்பதோடு அர்த்தமுள்ள மகளிர் தினத்திற்கான எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1777567784-death-6

ஒரு காலில் மூன்று வெட்டுக் காயங்களும், கையில் ஒரு காயம் , உடலுக்கு அருகில் சிறிய கத்தி-2.5 மில்லியன்டொலர் சைபர் மோசடி தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரியின் மரணம் குறித்த மேலதிக தகவல்கள் 

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 | இரவு 10:17 மணி சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் கொள்ளை சம்பவம்

Uni

இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராக அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் மே தினத்தை நினைவு கூருகின்றோம் – யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

April 30, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ளது. அந்த

f

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள்; மீண்டும் தவறவிடப்போகிறோமா?

April 30, 2026

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி. மீண்டும் தவறவிடப்போகிறோமா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

put

புடினுடன் தொலைபேசி உரையாடல்; ட்ரம்ப் முக்கிய கோரிக்கை

April 30, 2026

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடைபெற்ற 90 நிமிட தொலைபேசி உரையாடலில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக உதவி செய்யத்

RBKOMUGNEVG3ZHUJGP6GE3XTP4

டொரன்டோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க படகுச் சங்கம் தீக்கிரை: திட்டமிட்டுத் தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகம்!

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – டொரன்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த படகுச் சங்கத்தின் கட்டடம்

684105632_993797889662066_5036282836550723148_n

யாழில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற தேனிசை செல்லப்பா புகழ் வணக்க நிகழ்வு!

April 30, 2026

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு, போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை (ஏப்ரல்

1777557288-monk-6

 போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம்

April 30, 2026

போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம் ஏப்ரல் 30, 2026 – வெளிநாடுகளுக்குப்

Harsha-Harshana-Suriyapperuma

திறைசேரி செயலாளருடன் CoPF சந்திப்பு: “2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 பரிமாற்றங்கள் திருடப்பட்டுள்ளன

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய 10 அரசாங்க கடன் திருப்பிச் செலுத்தும்

death-pictures-4i5d2eg6pdb913xl

வவுனியாவில் கனடா பிரஜை திடீர் மரணம்: பொலிஸார் விசாரணை

April 30, 2026

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

heat-1554460827

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: இன்று 17 இடங்களில் சதமடித்த வெப்பம் – வேலூரில் 108.32°F பதிவு!

April 30, 2026

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மாநிலத்தின் 17

21

“வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்லாதீர்கள், பனையூர் வந்துவிடுங்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது

rcmp1

கஞ்சா விற்பனை நிலைய சோதனைக்கு எதிர்ப்பு: பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் மீது வழக்கு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – நோவா ஸ்கோடியாவின் பொட்லோடெக் (Potlotek) பகுதியில் உள்ள முதற்குடி மக்கள் (First Nations) வசிக்கும்