முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு–பரந்தன் பிரதான வீதியில் இன்று (11) இரு வேறு இடங்களில் சாலை விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
முதலாவது விபத்து கிளிநொச்சி வெளிக்கண்டல் பகுதியில் இடம்பெற்றது. இதில் ஒரு வாகனம் பாலத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பில் மோதி கடுமையாக சேதமடைந்துள்ளது.
இரண்டாவது விபத்து உடையார்கட்டு பகுதியில் இடம்பெற்றது. இதில் மோட்டார் சைக்கிளும் வாகனமும் மோதியதில் மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த இரண்டு விபத்துகளிலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்துகளுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்