புதிய வரலாறு படைத்தது இந்தியப் பெண்கள் அணி

இந்திய பெண்கள் அணி முதன்முறையாக உலக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. ஷைபாலி வர்மா (87), தீப்தி சர்மாவின் (58 ரன், 5 விக்கெட்) அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, பைனலில் 52 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மழையால் போட்டி 2 மணி நேரம் தாமதமாக துவங்கியது. ஓவர் குறைக்கப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா வால்வார்ட் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி வர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்த போது டிரையான் பந்தில் ஸ்மிருதி (45) அவுட்டானார். அபாரமாக ஆடிய ஷைபாலி, 49 பந்தில் அரைசதம் எட்டினார். ஷைபாலி (87 ரன், 2×6, 7×4) கைகொடுத்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (20), அமன்ஜோத் கவுர் (12) நிலைக்கவில்லை. மறுமுனையில் அசத்திய தீப்தி சர்மா, அரைசதத்தை பதிவு செய்தார். ரிச்சா கோஷ் (34) நம்பிக்கை தந்தார். கடைசி பந்தில் தீப்தி (58) ‘ரன்-அவுட்’ ஆனார்.

சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு தஸ்னிம் பிரிட்ஸ் (23), சுனே லஸ் (25) சோபிக்கவில்லை. மரிஜான்னே காப் (4), சினாலோ ஜப்தா (16) நிலைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணி 148 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின் இணைந்த கேப்டன் லாரா வால்வார்ட், டெர்க்சன் ஜோடி நம்பிக்கை தந்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த போது தீப்தி சர்மா பந்தில் டெர்க்சன் (35) போல்டானார். மறுமுனையில் அசத்திய லாரா, ஒருநாள் போட்டியில் தனது 11வது சதத்தை பதிவு செய்தார்.தொடர்ந்து அசத்திய தீப்தி ‘சுழலில்’ லாரா (101), டிரையான் (9), நாடின் டி கிளார்க் (18) சிக்கினர்.

தென் ஆப்ரிக்க அணி 45.3 ஓவரில், 246 ரன்னுக்கு ஆல்-அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் தீபதி சர்மா 5 விக்கெட் சாய்த்தார்.

பைனலை காண இந்திய ஜாம்பவான் சச்சின் வந்தார். வெற்றியாளருக்கு வழங்கப்படும் உலக கோப்பையை மைதானத்திற்குள் கொண்டு வந்தார். ‘கேலரியில்’ அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார்.

இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) ‘நாக்-அவுட்’ போட்டியில் அதிக ரன் குவித்த வீராங்கனையானார். இதுவரை 4 இன்னிங்சில், 331 ரன் எடுத்துள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் (330 ரன், 6 இன்னிங்ஸ்) உள்ளார்.

உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 39.50 கோடி பரிசு வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த தென் ஆப்ரிக்காவுக்கு ரூ. 19.50 கோடி பரிசு கிடைத்தது. பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 125 கோடி பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இம்முறை அதிக ரன் குவித்த வீராங்கனைகள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2வது இடம் பிடித்தார். இவர், 9 போட்டியில், 434 ரன் எடுத்தார். முதலிடத்தை தென் ஆப்ரிக்காவின் லாரா வால்வார்ட் (571 ரன், 9 போட்டி) கைப்பற்றினார்.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை