புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவு உலக மைய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் அண்மையில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகின்ற புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி ரிச்சர்ட் நந்தினியின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் நிதியுதவியில் வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வின் போது பிரதேச வைத்தியசாலையில் உடனடியாக மேற்கோள்ளப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.