பிரித்தானியா Knighthood கௌரவத்தை பெற்ற பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா இலங்கை விஜயம்!

வின்ட்சர் கோட்டையில் பிரித்தானியாவின் நைட்ஹூட் (Knighthood) கௌரவத்தை பெற்ற இலங்கையில் பிறந்த கல்வியாளர் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, அவர் கல்வி பயின்ற யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது, அவர் கல்வி கற்ற பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்த அவர், யாழ்ப்பாணத்தில் சாதாரண மாணவராக தொடங்கிய அவரது வாழ்க்கை பயணம் எவ்வாறு பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றின் தலைமை பொறுப்பு வரை உயர்ச்சி பெற்றது? என்பதை பகிர்ந்து கொண்டார்.

1973 முதல் 1985 வரை சென். ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்ற அவர், தற்போது பிரித்தானியாவின் University of Leicester பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் துணைவேந்தராகவும் பணியாற்றி வருகின்றார்.

“நான் அடிக்கடி என்னை இலங்கையின் மைந்தன் என்று அழைத்து கொள்வேன். நான் பிறந்த மண்ணும் இளமை பருவத்தைக் கழித்த இடமும் எனது வாழ்க்கை மதிப்புகளை உருவாக்கின” என அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்களாக பணியாற்றிய அவரது பெற்றோரிடம் இருந்து கல்வியின் முக்கியத்துவத்தை கற்று கொண்டார் என்று தெரிவித்த அவர், வடக்கு மாகாணத்தை சேர்ந்த இளம் தலைமுறையினர் அவர்களது திறமைகள் மீது நம்பிக்கை கொண்டு உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் ஊக்கமளித்தார்.

இந்த உணர்வுபூர்வமான பாடசாலை மீள்வருகையின் போது, கல்லூரியின் மாணவர்களுக்கு உதவும் வகையில் தனிப்பட்ட கல்வி நிதியம் ஒன்றை நிறுவுவதற்கு நன்கொடை வழங்குவதாக அவர் அறிவித்தார்.

இலங்கையின் இன மோதலின்போது உயிரிழந்த சென். ஜோன்ஸ் கல்லூரியை சேர்ந்தவர்களின் நினைவாக இந்த கல்வி நிதியத்தை அர்ப்பணித்தார்.

இதன்போது, “உங்கள் பயணம் முடிவடைந்து விட்டது ஆனால் உங்கள் கதை என்றும் வாழும்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகையை அவர் திறந்து வைத்தார்.

ESWATINI-768x432

இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை

November 26, 2026

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கோ அல்லது உள்ளூர் சமூகத்திற்கோ அறிவிக்கப்படாத இரகசிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம், இலங்கை அகதியும் பாலியல் குற்றவாளியுமான நபரொருவரை

WhatsApp Image 2026-11-25 at 09.49.26

பிரித்தானியா Knighthood கௌரவத்தை பெற்ற பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா இலங்கை விஜயம்!

November 26, 2026

வின்ட்சர் கோட்டையில் பிரித்தானியாவின் நைட்ஹூட் (Knighthood) கௌரவத்தை பெற்ற இலங்கையில் பிறந்த கல்வியாளர் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, அவர்

WhatsApp Image 2026-11-26 at 08.26.10

வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு!

November 26, 2026

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வுக்காக வல்வெட்டித்துறையில் அவரின் இல்லம் தயாராக உள்ளதாக ‘உடுப்பிட்டி செய்திகள்’

photo-collage.png (1)

சுவிசில் மாவீரர் பெற்றோர்,உரித்துடையோர் மதிப்பளிப்பு  

November 26, 2026

சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரின் ஹொக்பெல்டன் (Hochfelden) பகுதியில் ‘மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோர் மதிப்பளிப்பு 2026’ நிகழ்வானது மணிக்கு நடைபெற்றது.

uk

பிரித்தானியாவிலிருந்து இரகசிய ஒப்பந்தத்தின் கீழ் ஆபிரிக்க நாட்டிற்கு நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதி தற்கொலை?

November 26, 2026

பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்க நாடொன்றிற்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட இலங்கைப் பிரஜை, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளிப்படுத்தப்படாத

fsfsfds

கானி (Kaani) புயலின் முழுப் பாதிப்பு வலயத்திற்குள் இலங்கை?

November 26, 2026

மலேசியாவின் பிந்துலு(Bintulu) பகுதிக்கு வடக்காக ஒரு காற்றுச் சுழற்சி புதன்கிழமை (25.11.2026) உருவாகியுள்ளது. இது வெள்ளிக்கிழமை (27.11.2026) மேற்கு, வட

tha

இனப்படுகொலை நடைபெற்றதை ஐ. நா. சபை அங்கீகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை பூகோள அரசியல் நிலைப்பாடு தடுத்து நிறுத்தியுள்ளது

November 26, 2026

தமிழர்களுக்கு இனப்படுகொலை நடைபெற்றது என்பதை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை பூகோள அரசியல் நிலைப்பாடு தடுத்து நிறுத்தியுள்ளது என

Minnal

23 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

November 26, 2026

23 மாவட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய அநுராதபுரம், அம்பாறை,

mata

விமான நிலையத்தில் வெடி குண்டுப் பீதி

November 26, 2026

ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ‘அசூர் எயார்’ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம்

8

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உதயநிதி உண்மைக்குப் புறம்பான தகவல் – தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு”

November 25, 2026

சென்னை: மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து

the

மாவீரர் துயிலும் இல்ல பசுமைத் திட்டத்திற்கு லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் உதவி

November 25, 2026

மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் என்றும் நினைவில் நிறுத்தி, அவர்களின் நினைவிடங்களைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர்

7

“கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குகிறதா? – அமைச்சர் அருண்ராஜ் பதில்”

November 25, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு