சென்னை:
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்துள்ளார்.
வழக்கு மற்றும் காவல்துறை விசாரணை:
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளித்த புகாரின் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து கள்ளக்குறிச்சி மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்:
இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், நடவடிக்கை எடுக்க அரசு தயங்கவில்லை என்றும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் கடந்த கால திமுக ஆட்சியில் எந்த அளவுக்குப் பெண்கள் பாதுகாப்பின்றி அச்சத்தோடு இருந்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
#MinisterArunraj #KallakurichiMLA #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive