பழைய முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்குக் கடும் அழுத்தம்

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாமல், தேவையேற்படின் பழைய தேர்தல் முறையிலாவது உடனடியாக நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளன.

“வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அந்தச் சமூகத்தில் சர்வஜன வாக்குரிமை முறையாகச் செயற்படுத்தப்படவில்லை என்றே அர்த்தம். புதிய தேர்தல் முறையைச் சீரமைக்கும் வரை தேர்தலை நடத்த மாட்டோம் என்று கூறுவது நியாயமான வாதம் அல்ல.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தற்போது சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை அரசு தனது சொந்தப் பிரேரணையாக ஏற்றுக்கொண்டால், மிகக் குறுகிய காலத்தில் பழைய முறையிலேயே தேர்தலை நடத்தி முடிக்க முடியும். அவ்வாறு செய்யாமல் குழுக்களை நியமித்து காலத்தைக் கடத்துவது தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான ஒரு வழியாகவே அமையும்.” என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

“உண்மையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதனைப் பழைய முறையிலேயே நடத்த வேண்டும். புதிய முறையின் கீழ் தேர்தல் நடத்தப்படும் என்று கூறிக்கொண்டிருந்தால், அது மறு அறிவித்தல் வரை காலம் தாழ்த்தப்படுவதற்கே வழிவகுக்கும்.” என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

“குழுக்கள் என்பவை வெறும் அறிக்கைகளைத் தயாரிப்பதோடு தமது பணியை முடித்துக்கொள்கின்றன. கடந்த அரசிடமும் தற்போதைய அரசிடமும் நாம் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். மாகாண சபை முறையை அரச அதிகாரிகள் ‘வெள்ளை யானை’ என விமர்சிக்கின்றனர். ஆனால், மக்களின் அன்றாடத் தேவைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த அதிகாரம் முறையாகச் செயற்படுத்தப்பட வேண்டும்.” என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை மிக முக்கியமானவை. எனவே, ஒரு முழுமையற்ற ஜனநாயகச் சூழலைத் தவிர்ப்பதற்கு அரசு உடனடியாகத் தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரியான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையற்ற பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பாரிய வாகன நெரிசலும் நீண்ட வரிசைகளும் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர:

“இதற்காகப் பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை. QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அந்தந்த வாகன வகைகளுக்கு ஏற்பத் தேவையான எரிபொருள் அளவு முறையாக வழங்கப்படும். மக்கள் காட்டும் தேவையற்ற அவசரமே எரிபொருள் நிலையங்களில் இவ்வளவு கூட்ட நெரிசலுக்குக் காரணமாகியுள்ளது. இதனால், அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர்களை நாம் ஈடுபடுத்தியுள்ளோம்.

பொதுமக்கள் அமைதி காத்தால் இந்தப் பிரச்சினை ஏற்படாது. 10 லீற்றர் தேவைப்படும் இடத்தில் 50 லீற்றர் அடிக்க முற்படுகிறார்கள். இவை அனைத்தும் அவசரப்படுவதால் ஏற்படும் விளைவுகள். யுத்த நிலைமை காரணமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு முகாமைத்துவமே இது. உங்கள் வாகனத்திற்குத் தேவையான எரிபொருளை எந்தவொரு நிலையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, வீதி நெரிசலைக் குறைக்கவும் ஒழுங்கைப் பேணவும் போக்குவரத்துப் பொலிஸாரும் ஏனைய அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்

appu

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

June 14, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய

arju

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் அர்ச்சுனா இராமநாதன்

June 14, 2026

நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்