கொக்குதொடுவாய் – குஞ்சுக்கால்வெளியில் அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்த நடவடிக்கை!

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில், கொக்குதொடுவாய் குஞ்சுக்கால் வெளியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு மகாவலி அதிகாரசபை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அங்கு தமிழ் மக்களின் பூர்வீக தனியார் காணிகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் அடாவடித்தனமாக அத்துமீறி உள்நுழைந்து உப்பளம் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுட்டுள்ளனர். எனவே குறித்த அத்துமீறிய உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக உரிய தரப்பினருக்கு […]

லெபனானில் இதுவரை 850 பேர் வரை பலி

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் இதுவரையில் 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆம் திகதி முதல் இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்தி வரும் நிலையிலேயே குறித்த அறிக்கை வௌியாகியுள்ளது. குறித்த தாக்குல்கள் காரணமாக இதுவரை அங்கு 2,105 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சாரதிகள் கடும் அவதி

QR நடைமுறையின் கீழ் வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து, மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி மற்றும் தனியார் வாடகை வாகனச் சாரதிகள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர். இவ்விடயம் குறித்து சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ள முக்கிய விபரங்கள் வருமாறு: முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வாராந்தம் வழங்கப்படும் 15 லீட்டர் எரிபொருள், தமது அன்றாடத் தொழில் நடவடிக்கைகளுக்கு எவ்வகையிலும் போதுமானதாக இல்லை எனச் சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். […]

அமைச்சரின் சகோதரர் விபத்தில் பலி

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வீதி விபத்தில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழந்துள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹாஇலுப்பள்ளம பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.எம். பியசேன திசாநாயக்க என்பவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். மஹகல்கடவல பகுதியில் வசிக்கும் தனது இளைய சகோதரரின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு விசேட நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது இல்லத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து […]

அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது குறித்து போப் ஆழ்ந்த கவலை

த்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து போப் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளார். செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் வாராந்திர திருப்பலியின் போது போப் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார், போர் மூன்றாவது வாரத்தில் நுழைந்ததால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பலர் “போரின் பயங்கர வன்முறையால்” இடம்பெயர்ந்துள்ளனர் என்று அவர் கூறினார். “கடந்த இரண்டு […]

இனிவரும் காலங்களில் எரிபொருளை முறையாக விநியோகிக்க பொலிஸாரின் உதவி!

இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக QR முறையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் டி.ஜே. ராஜகருண இன்று (15) பிற்பகல் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எமது எரிபொருள் ஓடர்கள் (Orders) வழமை போன்று கிடைத்து வருகின்றன. எனவே, அடுத்த மாதம் இறுதி வரை எரிபொருள் விநியோகத்தில் எந்தச் சிக்கலும் இருக்காது. இன்று காலை […]

அதிக வெப்பத்துடனான காலநிலை; 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நாளை (16) வெப்பச் சுட்டியானது மனித உடலுக்கு உணரப்படும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் அதிக நீரை […]

முன்பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம்

027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதற்கான ஆசிரியர் பயிற்சிகளும் வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் ஒன்றினை 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும், அதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், ஒழுங்குமுறை அதிகாரசபையொன்றின் ஊடாக முன்பள்ளிகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அம்பலாந்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் இன்று (15) நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான, ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுத் […]

போதைப்பொருளுடன் பயணித்த படகு ஒன்று கண்டுபிடிப்பு

போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெவுந்தர பகுதிக்கு தெற்கே ஆழ்கடலில், கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் மீன்பிடிப் படகையும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தற்போது கரைக்குக் கொண்டு வரும் பணிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் அவசர கோரிக்கை

QR முறையின் கீழ் வழங்கப்பட முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எவ்வகையிலும் போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது வீடுகளில் இருந்து தூரப் பிரதேசங்களில் கடமையாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், தரநிலை வைத்தியர்கள் மற்றும் நிர்வாக வைத்தியர்கள், கடமைக்காக வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்குக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு முறையினால் சுகாதார சேவை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கும் […]