கொக்குதொடுவாய் – குஞ்சுக்கால்வெளியில் அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்த நடவடிக்கை!

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில், கொக்குதொடுவாய் குஞ்சுக்கால் வெளியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு மகாவலி அதிகாரசபை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அங்கு தமிழ் மக்களின் பூர்வீக தனியார் காணிகளில் பெரும்பான்மை இனத்தவர்கள் அடாவடித்தனமாக அத்துமீறி உள்நுழைந்து உப்பளம் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுட்டுள்ளனர்.

எனவே குறித்த அத்துமீறிய உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக உரிய தரப்பினருக்கு அழுத்தங்களை வழங்கிவந்தார்.

இந்நிலையில் குறித்த உப்பளம் அமைக்கப்படும் இடத்தின் நிலஉரிமை தொடர்பில் ஆராயும்வரை குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறிப்பாக கடந்த23.02.2026அன்று கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளை முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு அழைத்துச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இந்த அத்துமீறிய செயற்பாடுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனுக்குத் தெரியப்படுத்தியதுடன், குறித்த அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் கவனஞ்செலுத்துமாறு கடந்த 25.02.2026அன்று வடக்கு மாகாண அளுநருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டதுடன், கடந்த 26.02.2026அன்று முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்கவிடமும் நேரடியாக கடிதமொன்று கையளிக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து 27.02.2026அன்று குறித்த குஞ்சுக்கால்வெளி பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அங்கு அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த பெரும்பான்மை இனத்தவர்களின் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து அதே தினத்தில் கொக்குத்தொடுவாய்பகுதி தமிழ் மக்களுடனும், காணி உரிமையாளர்களுடனும் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த அத்துமீறிய உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு முல்லைத்தீவு மாவட்டசெயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவி பிரதேசசெயலாளர் ஆகியோரிடம் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் குறித்த அத்துமீறிய உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை பெரும்பான்மை இனத்தவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்தொள்ளுமாறு கடந்த 07.03.2026அன்று மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவாகரன் அவர்களால் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டதுடன், குறித்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் ஆகியோருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரால் பிரதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர் அழுத்தத்தினையடுத்து குறித்த உப்பளம் அமைக்கப்படும் இடத்தின் நிலஉரிமை தொடர்பில் ஆராயும்வரை குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு கடந்த 10.03.2026ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

“மகாவலி அதிகார சபையினால் தனியார் காணிகளை உப்பளம் அமைப்பதற்காக வழங்கியமை தொடர்பான முறைப்பாடு” எனத் தலைப்பிடப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக, பல நில உரிமையாளர்கள், கிராம மட்ட அமைப்புகள் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ துரைராசா ரவிகரன் அவர்களினால் கடந்த 2026 பெப்ரவரி 27 அன்று என்னிடம் ஒரு முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவின் குஞ்சுக்கால்வெளி தொட்டப்பனிக்கட்டி பகுதியில் அமைந்துள்ள சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு, முறையான அனுமதியின்றி உப்பளம் அமைப்பதற்காக மகாவலி அதிகார சபையினால் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபர் தனியார் காணிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் உங்கள் பார்வைக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, நில அளவைத் திணைக்களத்தின் பதிவுகளின்படி, கேள்விக்குரிய இப்பகுதியில் TOPO PP70 வரைபடத்தின் Inset இலக்கங்கள் 17, 18 மற்றும் 19 ஆகியவற்றுக்குள் உள்ளடங்கும் தனியார் காணிகளும், அவற்றுக்கு இடைப்பட்ட மேய்ச்சல் நிலங்களும் காணப்படுவது அவதானிக்கப்பட்டது.

இப்பகுதியில் மேலும் தவறான புரிதல்களையும் பதற்றத்தையும் தவிர்ப்பதற்காக, தற்போது உப்பளங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலத்தின் உரிமையை முறையாக விசாரணை செய்து உறுதிப்படுத்துவது அவசியமாகும். எனவே, நிலத்தின் உரிமை திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்படும் வரை, இந்த நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது பொருத்தமானதாக இருக்கும்.

அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம். இதன் மூலம் இவ்விடயம் வெளிப்படையான மற்றும் சட்டபூர்வமான முறையில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய முடியும் – என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 12.03.2026 வவுனியா மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், குறித்த அத்துமீறிய உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை நிறுத்துவதுடன், உரியவிசாரணைகளை மேற்கொண்டு, சட்டவிரோத அனுமதி வழங்கியோருக்கும், அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கும் எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தினார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் உமாமகேஸ்வரனிடம் இவ்விடயத்தை பாரப்படுத்துவதாக அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு