இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இருவர் கைது

பொத்துவில், பானமை – சாஸ்திரவேல பகுதியில் கார் ஒன்றில் மான் மற்றும் காட்டெருமை (குளுமாடு) இறைச்சிகளைக் கடத்திச் சென்ற இரு சந்தேக நபர்கள் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பானமை வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குமண தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகள், சாஸ்திரவேல விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து சனிக்கிழமை (14) முன்னெடுத்த விசேட சோதனையின் போதே இவர்கள் பிடிபட்டனர். வெள்ளை நிறக் கார் ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட சுமார் 70 கிலோ கிராம் எடையுள்ள […]

’பொன் அணிகளின் போர்’: சமர் சமநிலையில் நிறைவு

‘பொன் அணிகளின் போர்’ என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 109 ஆவது வரலாற்றுப் புகழ்பெற்ற பெருஞ்சமர் சமநிலையில் நிறைவடைந்தது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியின் சுருக்கம் வருமாறு: முதல் இன்னிங்ஸ்: நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் […]

கனடாவிலிருந்து அல்பெர்டா பிரிய வேண்டுமா; சுதந்திர மனு இயக்கத்தின் முடிவு நெருங்குகிறது!

கையொப்பங்களை சேகரிக்க இன்னும் சுமார் ஆறு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அல்பெர்டா சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள் குடிமக்கள் முன்னெடுத்த மனு இயக்கத்திற்காக போதுமான கையொப்பங்களை திரட்ட முயற்சி செய்து வருகின்றனர். இந்த மனு வெற்றியடைந்தால், அல்பெர்டா கனடாவிலிருந்து பிரிய வேண்டுமா என்பது குறித்து மாகாணம் முழுவதும் ஒரு பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த இயக்கம் வெற்றி பெற்று, பொதுசன வாக்கெடுப்பில் பெரும்பான்மையான வாக்காளர்கள் பிரிவினையை ஆதரித்தாலும் கூட, அது […]

அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு!

அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவை திருத்தியமைத்து கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவை திருத்தியமைத்து கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆட்சி மன்றக் குழுவின் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழுவில் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, வேணுகோபால், ஜஸ்டின் செல்வராஜ், இன்பதுரை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், அதிமுகவில் 4 பேர் கொண்ட தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். […]

சஜித் பிரேமதாசவின் அண்மைக்கால செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிக்குரியதாக மாறியுள்ளன!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் மற்றும் அவரது அண்மைக்கால செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிக்குரியதாக மாறியுள்ளன என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம் தொடர்பில் ஆற்றிய உரை, தற்போது மக்கள் மத்தியில் ஒரு நகைச்சுவையாகப் பார்க்கப்படுகின்றது. உலகில் போர் நிலவும் நாடுகள் […]

ஏப்ரல் 23ஆம் திகதி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (மார்ச் 15) அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார். […]

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!

ரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் அவசர எரிபொருள் தேவை ஏற்பட்டால் அதனைப் பெற்றுக்கொள்வது குறித்து இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவை மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இன்று (15) காலை 6:00 மணி முதல் QR குறியீட்டு முறைக்கு அமைவாக […]

வீதி விபத்தில் இளைஞன் பலி

கேகாலை- துல்ஹிரிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்றையதினம்(14.3.2026) இடம்பெற்றுள்ளது. அபேபுஸ்ஸ திசையிலிருந்து வாரியகொட திசை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக வரகாப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் துல்ஹிரிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் […]

தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன; ஆனால் அந்த இடைவெளியை தமிழர் விடுதலைக்கூட்டணி நிரப்பும்

சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன. எனவே அந்த இடைவெளியை தமிழர் விடுதலைக்கூட்டணி நிரப்பும் என்று அதன் ஊடக பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சுதாகரன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று(14.3.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர் விடுதலைக்கூட்டணியானது புதிய நிர்வாகிகளின் கீழ் தமிழ்மக்களுக்கான தலைமையை வழங்கும் நோக்குடன் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. நாங்கள் கடந்த காலங்களில் சில பின்னடைவுகளை சந்தித்திருந்தோம். தற்போது […]

விமல் வீரவன்ச போன்ற போலித் தலைவர்களை மக்கள் ஒதுக்கி விட்டார்கள்

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். கொழும்பில் நேற்று(14.3.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, ராஜபக்ச முகாமிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷவை உருவாக்கி, அவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டபோது எதிர்க்கட்சிக்கு வந்து அவர்களுக்கு எதிராகவே கூச்சலிட்ட நரிகள்தான் இன்று எமது எதிர்க்கட்சியைக் குற்றம் சொல்ல […]