சட்டவிரோத பொருட்களுடன் சுன்னாகத்தில் மூவர் கைது
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து மூவர் சட்டவிரோத பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் நேற்றையதினம்(14.3.2026) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஒருவரிடமிருந்து வாளும், மற்றைய இருவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்ட. ஒருவரிமிருந்து 2 கிரம் 340 மில்லிகிராம் ஐஸும், […]
பழைய முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்குக் கடும் அழுத்தம்

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாமல், தேவையேற்படின் பழைய தேர்தல் முறையிலாவது உடனடியாக நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளன. “வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அந்தச் சமூகத்தில் சர்வஜன வாக்குரிமை முறையாகச் செயற்படுத்தப்படவில்லை என்றே அர்த்தம். புதிய தேர்தல் முறையைச் சீரமைக்கும் வரை தேர்தலை நடத்த மாட்டோம் என்று கூறுவது நியாயமான […]
புதிய வாகனங்களுக்கான QR பதிவு ஆரம்பம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இதுவரை பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான பதிவுகளை மேற்கொள்ளும் வசதி தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, fuelpass.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘Vehicle Registration’ பகுதியின் ஊடாகத் தேவையான தகவல்களை உள்ளீடு செய்து புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியும். ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்களுக்குத் தமது […]
ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைகின்றமை சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது – ஹரிணி
ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இலங்கை பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கநெறி, பொறுப்புணர்வு மற்றும் விமர்சன ரீதியான சிந்தனையை ஊக்குவித்து, தேசிய ஊடகக் கலந்துரையாடல்களில் அவர்களைச் செயற்திறனுடன் பங்கெடுக்கச் செய்யும் நோக்கில், கொழும்பு ஆனந்தக் கல்லூரியின் குலரத்ன மண்டபத்தில் மார்ச் 14ஆம் […]
2026 ஆம் ஆண்டுக்காக அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள்!
2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடமாற்றங்கள் அமுலாகும் திகதி குறிப்பிடப்படாத அனைத்து இடமாற்ற உத்தரவுகளும், குறித்த திகதியிலிருந்தே நடைமுறைக்கு வர வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இடமாற்றங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீடுகள் மீதான தீர்மானங்கள் தற்போது அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானங்களை அரச சேவை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட […]
அமெரிக்க வங்கிகளுக்கு எச்சரிக்கை!

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி கிளைகள் மீதான தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்தப்போவதாக ஈரான் புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது. ஈரானிய வங்கி கட்டிடங்களுக்கு அருகில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களால் நாட்டின் வங்கிச் செயல்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. அதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க வங்கி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல்களை நடத்தியிருந்தது. எதிரித் தரப்பினர் மீண்டும் இத்தகைய தவறுகளை […]
அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவது குறித்த கலந்துரையாடல்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத் தொடர்ந்து கண்காணித்து ஒரு நாடாக அவற்றுக்குக் கூட்டு முயற்சியுடன் முகம் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் […]
பெருமளவிலான பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றல்!

துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பும்கொட கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. துங்கல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை (14) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த பீடி இலைகள் லொறி ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 1,654 கிலோகிராம் 615 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பீடி இலைகளை கடல் வழியாகக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றையும் பொலிஸார் […]
யாத்திரை சென்ற கார் விபத்து: சாரதி போதைப்பொருள் உட்கொண்டமை உறுதி!

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, நோர்வூட் – ரோக்வுட் பகுதியில் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான காரின் சாரதி, போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி மாலை 4:30 மணியளவில் ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியின் ரோக்வுட் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. காரை ஓட்டிச் சென்ற சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி […]
மோட்டார் சைக்கிள் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!
கம்பஹா – தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பே – பூகொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை (14) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பூகொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த பெண் பாதசாரி தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கப்புகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் என அடையாளம் […]