நீர்கொழும்பு, தளுபொத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பல்லன்சேனை திறந்தவெளி சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் குழுவொன்று கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளை நோக்கித் கல்வீச்சுத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகச் சம்பவ இடத்திலிருந்த ஊடகவியலாளர் தெரிவித்தார். இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் காவல்துறையினர், காவல்துறையின் விசேட அதிரடிப்படை (STF), கலவரத் தடுப்புப் பிரிவு மற்றும் இலங்கை விமானப்படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை தீவிரமாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.