அம்பலாங்கொடை, மோதர தேவாலயக் குழுத் தலைவர் மிரந்த வருசவிதான என்பவரின் படுகொலைக்கு ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட ‘படு மீயா’ (Batu Meeya) எனும் சந்தேக நபரின் மனைவியும் மேலும் மூன்று சந்தேக நபர்களும் பொலன்னறுவை பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வசமிருந்து 20 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களை பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி கிடைத்துள்ளது.