செவ்வாய்க்கிழமை காலை நோர்த் யோர்க் பகுதியில் உள்ள வாகனத் தரிப்பிடம் (Parking lot) ஒன்றில் கார் மோதியதில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச்ம்பவம் காலை 10:40 மணியளவில் டொன் மில்ஸ் வீதி (Don Mills Road) மற்றும் லோரன்ஸ் அவென்யூ (Lawrence Avenue) சந்திப்பிற்கு அருகில் இடம்பெற்றதாக டொராண்டோ பொலிஸார் சமூக வலைதளப் பதிவொன்றில் தெரிவித்துள்ளனர்.
பொது வீதிகள் எதுவும் மூடப்படவில்லை என்றும், விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
விபத்து நிகழ்ந்த சூழல் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.