நீதிமன்ற அவமதிப்புக் குற்றம்; இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் உத்தரவு

மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற ஒரு வழக்குத் தொடர்பில் நீதிமன்றத்துகு வெளியில் பகிரங்கமாகத் தெரிவித்த சில கருத்துக்கள் மூலம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும், ஜெயபாலன் கஜபாகு என்பவரும் இழைத்துள்ளனர் எனத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட ஆயத்தின் முன்னால் இந்த வழக்கு நேற்று (18.11.2025) எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிராளிகள் இருவரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

எதிராளிகளில் ஒருவரான இளங்ககுமரன் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி சாமர நாணயக்கார என்பவர் மற்றைய எதிராளியான கஜபாகுவுக்குச் சட்டத்தரணி ஒருவரை நியமிக்க அவகாசம் கோரியமையால், அதற்கு இடமளித்து, வழக்கு வரும் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மனுதாரரான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் முன்னிலையாகியிருந்தார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய சிறிலோகநாதன் என்ற அகதி ஒருவர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர் சார்பில் தமது கனிஷ்ட சட்டத்தரணிகளுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகி, அவரைப் பிணையில் விடுவிக்க வாதாடி இருந்தார்.

பொலிஸார் கடுமையாக ஆட்சேபித்தமையால் அன்றைய தினம் பிணை வழங்கப்படவில்லை.

இரண்டு தினங்களுக்குப் பின்னர் சிறிலோகநாதன் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்தில் காணொளிப் பதிவுகளுக்குப் பேட்டியளித்த இளங்குமரன் எம்.பியும், கஜபாகு என்பவரும், தங்களுடைய அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்துவதற்காக, நாடு திரும்பிய அகதியை சுமந்திரன் தனது சட்ட வாதாட்டத்தின் மூலம் விளக்கமறியலில் வைக்கச் செய்து, நீதிமன்றத்தோடு இணைந்து முறையற்ற வகையில் செயற்பட்டார் எனக் கூறியிருக்கின்றார் என்று சுமந்திரன் இப்போது தாம் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மல்லாகம் நீதிமன்ற வழக்குப் பதிவுகள், காணொளிப் பதிவுகள் போன்றவற்றையும் மனுதாரர் தமது மனுவோடு இணைத்துள்ளார்.

இன்று மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது எதிராளிகளில் ஒருவரான ஜெயபாலன் கஜபாகு என்பவருக்குச் சட்டத்தரணி முன்னிலையாகாத நிலையில் அதற்குக் கால அவகாசம் வழங்கி வழக்கை பெப்ரவரி 5 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்