நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இன்று திங்கட்கிழமை(15) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகளில் முடிவடைந்த பின்னர் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 18 நாட்களுக்கு பின்னர் நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி இவ்வாறு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.