நாட்டின் உரக் கையிருப்பினைச் சந்தையில் பேணுவதற்கு இணக்கம்

அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான உரக் கையிருப்பினைச் சந்தையில் பேணுவதற்காக, விவசாய அமைச்சுடன் இணைந்து செயற்பட உர நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளன.

விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே உர நிறுவனங்கள் இதனைத் தெரிவித்தன.

மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக விநியோக வலையமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியிலும், இம்முறை சிறுபோக நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரத்தைச் சந்தையில் தாராளமாகப் பேணுவது மற்றும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

நாட்டினதும் மக்களினதும் உணவுப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் உரிய முக்கியத்துவம் அளித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிறுபோகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு ஏதுவாக, சந்தையில் போதுமான உரக் கையிருப்பைப் பேண விவசாய அமைச்சும் தனியார் நிறுவனங்களும் இணைந்து ஒரு வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், எதிர்காலத்தில் இத்தகைய நெருக்கடி நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் திட்டங்களைத் தயாரிப்பதன் அவசியத்தையும், அதில் அரசாங்கம், உர நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய மூன்று தரப்பினரதும் அர்ப்பணிப்புத் தேவை என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதற்காக நிறுவனப் பிரதிநிதிகள் வழங்கும் ஒத்துழைப்பையும் அவர் பாராட்டினார்.

இலங்கையின் உரக் கையிருப்பு நிலவரம் குறித்த முக்கிய தரவுகள் இதன்போது வெளிப்படுத்தப்பட்டன.

2026 சிறுபோகத்தில் 5 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

நெற்செய்கைக்கு 83,000 மெட்ரிக் தொன் மற்றும் ஏனைய பயிர்களுக்கு 42,000 மெட்ரிக் தொன் என மொத்தம் 125,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் இம்முறை தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 1ஆம் திகதி நிறுவனங்களிடம் 95,000 மெட்ரிக் தொன் மற்றும் விநியோகஸ்தர்களிடம் 7,000 மெட்ரிக் தொன் என 102,000 மெட்ரிக் தொன் யூரியா காணப்பட்டது.

கடந்த இரு வாரங்களில் 27,000 மெட்ரிக் தொன் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 17ஆம் திகதி நிலவரப்படி நிறுவனங்களிடம் 68,000 மெட்ரிக் தொன் மீதமுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11,000 மெட்ரிக் தொன் மாத்திரமே விற்பனையாகியிருந்தது. ஆனால் உரத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உரத்தைச் சேகரித்ததால், இந்த மார்ச் மாதத்தில் இதுவரை 27,000 மெட்ரிக் தொன் விற்பனையாகியுள்ளது.

மேலதிகமாக 77,000 மெட்ரிக் தொன் யூரியா ஓடர் செய்யப்பட்டுள்ளது. இதில் 21,000 மெட்ரிக் தொன் இந்த மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் இலங்கையை வந்தடையும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு நகரை அண்மித்த களஞ்சிய வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உர இறக்குமதிக்கான கடன் வசதிகளை வழங்குதல் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

நெல் மற்றும் மரக்கறிகள் போன்ற குறுகிய காலப் பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்!

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்

keerthana-4-2026-05-14-06-26-38

“நானும் ஒரு மாற்றுத்திறனாளியின் மகள்தான்!” – சர்ச்சைப் பேச்சுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா உருக்கமான மன்னிப்பு!

May 14, 2026

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்துத் தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ்

amulmilkhike-1778683475

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்; பொதுமக்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அமுல் பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி குஜராத் கூட்டுறவு பால்