சென்னை:
2026-27-ம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ (NEET) நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதுவரை இல்லாத அளவாக சுமார் 22.80 லட்சம் மாணவ- மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட 30 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்கள் உட்பட உலகம் முழுவதும் மொத்தம் 5,500 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறும் இத்தேர்விற்காக, மாணவர்கள் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். 1:30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தேர்வர்கள் வெளிப்படையான தண்ணீர் பாட்டில்கள், ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டைகளை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆடை கட்டுப்பாடுகள், காலணி விதிமுறைகள் மற்றும் விரிவான சோதனை முறைகளை என்.டி.ஏ முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் இத்தேர்வின் முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#NEET2026 #MedicalEntrance #NTA #EducationNews #NEETExam #MBBS #BDS #FutureDoctors #ExamGuidelines #NationalTestingAgency #BreakingNews #TamilNaduEducation #StudentsSuccess #May3 #ExamDay #MedicalAdmission #HigherEducation #NEETUpdate #ChennaiNews #CompetitiveExams_“`