தோட்ட மக்களின் அடிப்படை ச் சம்பளம் அதிகரிக்கப்படுமா?

எந்த தோட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலதிகமாக வேலை வழங்குகிறார்கள். வருகைக்கான கொடுப்பனவாகவே 200 ரூபா வழங்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இது அடிப்படை சம்பள உயர்வு அல்ல, வருகை கொடுப்பனவு முழுமையாக கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியாது? பெருந்தோட்ட மக்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படுமா அல்லது அதிகரிக்கப்படாதா, இதுவே என் கேள்வி முடிந்தால் பதிலளியுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உங்களுக்கும், (பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வியை நோக்கி) விடயங்களை தெரியாமல் மேசையை தட்டும் உங்களின் நண்பர்களுக்கும் ஒரு விடயத்தை குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகிறேன். அமைச்சர் வசந்த சமரசிங்க தொழிசங்க சந்திப்பின் போது எம்முடன் கலந்துக் கொண்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளத்தில் முடிந்தால் 10 ரூபாவையேனும் அதிகரிக்கமுடியுமா என்று ஜனாதிபதியிடம் தெளிவாக குறிப்பிட்டேன்.

ஜனாதிபதி தனது உரையில் பெருந்தோட்ட மக்களுக்கு 1750 ரூபாய் வழங்கப்படும், 200 ரூபா அரசாங்கத்தால் வழங்கப்படும் அதற்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 25 நாட்களுக்கும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

எந்த தோட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலதிகமாக வேலை வழங்குகிறார்கள். வருகைக்கான கொடுப்பனவாகவே 200 ரூபா வழங்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இது அடிப்படை சம்பள உயர்வு அல்ல, வருகை கொடுப்பனவு முழுமையாக கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியாது. தோட்ட கம்பனியே அதனை தீர்மானிக்க வேண்டும். தொழில் வழங்கல் நாட்கள் மாற்றமடையலாம்.

பெருந்தோட்ட கம்பனிகள் 200 ரூபா வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெருந்தோட்ட கம்பனிகளின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை ஒரு ரூபாய் கூட அதிகரிக்க போவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதாயின் அதற்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவேன்.

வீர வசனம் பேசலாம் ஆனால் நடைமுறையில் அவற்றை செயற்படுத்த முடியாது. பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படுமா அல்லது அதிகரிக்கப்படாதா, இதுவே என் கேள்வி முடிந்தால் பதிலளியுங்கள் என்றார்.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை