தையிட்டி பவானி வீதி மீட்பு விவகாரம்: தவிசாளரைப் பொலிசார் அச்சுறுத்தல்!

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான ‘பவானி வீதி’யை மீட்கும் நடவடிக்கையைக் கைவிடுமாறு, தவிசாளர் சோ.சுகிர்தனை பலாலி பொலிஸார் அழைத்து அச்சுறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் பிரதேச சபைக்குச் சொந்தமான பவானி வீதி காணப்படுவதை உறுதிப்படுத்திய தவிசாளர், கடந்த 28ஆம் திகதி நில அளவையாளர்கள் மூலம் அதனை அடையாளம் கண்டு அளவீடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த வீதியை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் என விகாராதிபதிக்கு தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

அக்கடிதத்தில், “11ஆம் திகதிக்குள் வீதி விடுவிக்கப்படாவிட்டால், 12ஆம் திகதி பிரதேச சபையினால் வேலி அகற்றப்படும். அவ்வாறு அகற்றப்பட்டால், அதற்கான செலவை விகாராதிபதியே செலுத்த வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவித்தலுக்கு எதிராக விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, தவிசாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

இதன்போது, “வேலியை அகற்றினால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்பதால் அந்த முயற்சியை கைவிட வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொலிஸார் தவிசாளரை மிரட்டும் தொனியில் கூறினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் எச்சரிக்கைக்குப் பதிலளித்த தவிசாளர் சோ.சுகிர்தன், “சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நான் தயார். இது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி என்பதற்கான ஆவணங்கள் எம்மிடம் உள்ளன.

விகாராதிபதி வீதியை விடுவிக்காவிட்டால், நாம் வேலியை அகற்றி வீதியை மீட்போம். அதற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யலாம். அதனை நாம் அங்கு சந்திப்போம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 28ஆம் திகதி விகாரை அமைந்துள்ள காணியை அளக்க முற்பட்டபோது, “காணிகள் விடுவிக்கப்படும்” என்ற உறுதிமொழியை மாவட்ட அல்லது பிரதேச செயலர் கடிதம் மூலம் வழங்கினால் மட்டுமே அளவீடு செய்ய அனுமதிப்போம் என காணி உரிமையாளர்கள் மறுத்திருந்தனர்.

இதன் காரணமாக அன்றைய தினம் காணி அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டன என்று யாழ். மாவட்ட செயலர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

amma_Mu

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி