தையிட்டிக் காணிகளை விடுவிக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாகத் தெரியவில்லை – செல்வராசா கஜேந்திரன்

தையிட்டி விகாரைப் பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப் பாக அவதானிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாள்களில் அமைச்சர்கள் குழு வெளிநாட்டுக்கு செல்லவுள்ளது. அதனாலேயே வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டி பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக் கொள்வதற்காக அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று இடம்பெற்ற ‘தையிட்டி: அடுத்து என்ன?’’ எனும் தலைப்பில் தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்
போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- தையிட்டி விகாரையின் பெயர்பலகையில் சிறீலங்கா இராணுவத்தினரால் கட்டப்பட்டு அவர்களால் பராமரிக்கப்படுகின்ற விகாரையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விகாரை பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமானதாஎன்ற ஒரு கேள்வியும் எழுகின்றது. விகாரை அமைந்திருக்கும் காணி
உரிமையாளர்கள் அந்த விகாரையின் வாசலுக்குக் கூடச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. தென்பகுதியில் குழப்பங்கள் ஏற்படும் எனக் கூறிக் கொண்டு தையிட்டி விகாரைக்கு பலத்த பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படுகின்றது. இதன் அர்த்தம் அந்த விகாரையில் இருக்கக்கூடிய ஒரு துண்டு நிலத்தை கூட விடுவிக்க முடியாது என்பதே
ஆகும். தையிட்டி விகாரைப் பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. அண்மையில் வருகை தந்திருந்த ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தையிட்டி விகாரைப்
பிரச்சினை தொடர்பாகவும் எங்களோடு கலந்துரையாடி இருந்தார்.

அந்த விகாரைப் பிரச்சினை தொடர்பாக தாங்கள் தொடர்ந்தும் அவதானித்து வருகிறார்கள் எனவும் எங்களிடம் தெரிவித்திருந்தார். தையிட்டி விவாகாரம் தொடர்பில் உலக நாடுகளால் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுவருகிறது. எதிர்வரும் நாள்களில் அமைச்சர்கள் குழு வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளது.
அதனாலேயே வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டிப் பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக் கொள்வதற்காக அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது. வேறு இடங்களில் காணிகளை
சுவீகரிக்கின்ற போது எழுத்து மூலமான அறிவிப்பின் மூலமே காணிகளை சுவீகரிக்கிறார்கள். ஆனால் தையிட்டி
விகாரைப் பிரச்சினையில் நடப்பதோ வேறு விதமாக உள்ளது. நில அளவைகள் திணைக்களம்
எந்தக் கட்டளையின் அடிப்படையில் இந்தக் காணிகளை அளவீடு செய்வதற்கு தயாராகின்றது? எழுத்து மூலமாகக் கட்டளைகள் எதுவும் வழங்கப்பட்டிருக்கின்றதா? அவ்வாறாயின் என்ன தேவைக்காக குறித்த காணிகள் அள
விடப்படுகின்றன என அந்த எழுத்து மூல ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.
மக்களுக்கு காணிகளை விடுவிப்பதற்காகவே இந்த அரசாங்கம் காணிகளை அளவீடு செய்கின்றது என்பதில்
எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

குருந்தூர் மலையிலும் அகழ்வு பணிகளை மாத்திரமே செய்வோம், எதுவிதகட்டுமானப் பணிகளும் இடம்பெறாது என அப்போதைய புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். ஆனால் தற்போது ஒரு விகாரை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இப்படி தையிட்டி பகுதிலும் பிரச்சினை கைமீறிப் போன பின்னர் எதிர்ப்புக் காட்டி எதுவித பலனும் இல்லை. தையிட்டிப் பகுதியில் தொடர்ந்தும் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்று வருகின்றன. மூன்று வருடங்களாக இடம்
பெறும் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாகவே அந்த ஆக்கிரமிப்புகள்
கட்டுப்படுத்தப்பட்டன.

இல்லையெனில் அந்த இடம் முழுவதுமே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். தையிட்டிக் காணி உரிமையாளர்கள் மாற்றுக் காணிகளை பெற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் அபத்தமான பொய் ஒன்றை அண்மையில்கூறியிருந்தார். தொடர்ந்தும் தையிட்டி விகாரை பகுதியைச் சூழ உள்ள காணிகளுக்குப் பொலிஸ் மற்றும்
இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவற்றையெல்லாம் அவதானிக்கின்ற போது காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது என்ற உத்தரவாதம் இல்லை என்றே கூறவேண்டும்.
அரசாங்கம் காணிகளை அளவீடு செய்து மக்களுக்கு வழங்கும் என்பதனை எழுத்து மூலமாக அறிவிக்குமாக
இருந்தால் காணிகளை அளவிடு செய் வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் சிந்திக்கலாம். ஆனால் அப்படி ஓர் எழுத்துமூல உத்தரவாதத்தை தராத நிலையில் அளவீட்டு பணிகளைஅனுமதிக்கமுடியாது என்றார்.

b

ஹெரோயின் கடத்தல்: மீன்பிடிப் படகின் உரிமையாளரும் கைது

April 18, 2026

சுமார் 150 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த விவகாரத்தில், ‘தெனுவன் புதா’ என்ற பலநாள் மீன்பிடிப்

jail

வர்த்தக நிலையமொன்றினுள் பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை: ஐவர் கைது

April 18, 2026

ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்

thelli

தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவித்தார்களா என முதலில் சோதியுங்கள்; பொண்ணொருவர் பகிரங்கக் குற்றச்சாட்டு

April 18, 2026

தனது மகனை தெல்லிப்பழை பொலிஸார் அவமானப்படுத்தியதாக தாயாரொருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவிப்பது இல்லை என்றால்

cru oil

கச்சா எண்ணெய் விலை பாரியளவில் சரிவு!

April 18, 2026

சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின்

karan

குற்றவாளி ‘கரன்தெனிய ராஜு’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

April 18, 2026

இந்தியாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கரன்தெனிய ராஜு’ என்பவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்

arres

கட்டைக்காட்டு பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டவர் கைது

April 18, 2026

யாழ்ப்பாணம்- வடமராட்சி, கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

easter

இராணுவ புலனாய்வுப் பிரிவும் ஈஸ்டர் குண்டு தாக்குதல் திட்டத்தில் கூட்டுச் சதி?

April 18, 2026

ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்தப்படவிருந்த காலப்பகுதியில் சஹ்ரான் இந்தியாவுக்கு சென்று விட்டதாக இராணுவ புலனாய்வு பிரிவு அறிவித்ததாக பொலிஸ் மா

nalin

எரிபொருள் விலை அதிகரிப்பு; அமைச்சர் வெளியிட்ட தகவல்

April 18, 2026

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் நிலவும் பெற்றோலியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு அமைய எதிர்காலத்தில்

photo-collage.png (10)

கனடா வாகன விபத்தில் கொல்லப்பட்ட தனது குடும்பத்துக்காக நியாயம் கேட்டுப் போராடிய தமிழருக்கு நீதி மறுப்பு!

April 17, 2026

கனடாவில் 2022 இல் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கு சரியான விதத்தில் நீதி வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டமொன்று தற்போது

miss

கிளிநொச்சியில் 13 வயது சிறுவனைக் காணவில்லை!

April 17, 2026

கிளிநொச்சி பொன் நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pim

280 டொலர் கச்சா எண்ணெய் கொடுக்கல் வாங்கல்: ஆதாரங்களை முன்வைக்குமாறு அரசாங்கம் சவால்

April 17, 2026

அரசாங்கம் ஒருபீப்பாய் கச்சா எண்ணெயை சுமார் 268 டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு

dddd

மத்திய ஒன்ராறியோ – ஒரிலியாவில் வெள்ள அபாயம் அதிகரிப்பு: மீட்புப் பணிகளில் ஊழியர்களும் தொண்டர்களும் தீவிரம்

April 17, 2026

மத்திய ஒன்ராறியோவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் பெய்து வரும் பலத்த மழை மற்றும் நீர்மட்டம் உயர்வு காரணமாக