“திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும்!” – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி:

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை (நவம்பர் 28) தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை:

கார்த்திகை தீபத்தையொட்டி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள பழமையான கல் தூணில் இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அண்மையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், கடந்த 24-ஆம் தேதி அங்கு தீபம் ஏற்றப்படாததால், தமிழ்நாடு அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதன்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, உத்தரவை அமல்படுத்தப் பலமுறை முயற்சித்ததாகவும், கோயில் நிர்வாகம் அதிகாரம் அளிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் வாதங்களை நிராகரித்த நீதிபதிகள் மதுரை மாவட்ட ஆட்சியருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

முன்னாள் நீதிபதிகள் குழு மற்றும் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு:

மலை உச்சியில் உள்ள தூணில் நாளை (நவ.28) தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இதனை அமல்படுத்தவும் தற்காலிகமாகக் கோயில் பொறுப்புகளை நிர்வகிக்கவும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் வி.பார்த்திபன் அடங்கிய குழுவை நியமித்துள்ளது. தர்காவில் இருந்து 50 மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் மலையில் எங்கு வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என்றும், அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப் பகுதியில் உள்ள கோயில் மற்றும் தர்காவுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு அளிக்கவும், இரண்டையும் வேறுபடுத்தும் விதமாக வேலி அமைக்கவும் உச்ச நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது.

அறங்காவலர் குழு கலைப்பு மற்றும் அவமதிப்பு நோட்டீஸ்:

திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைத்த உச்ச நீதிமன்றம், அதில் உள்ள அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், மதுரை ஆட்சியர், டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, காணொளியில் ஆஜராக அவர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது. அத்துடன் தமிழ்நாடு டிஜிபி, அறநிலையத்துறை துணைச் செயலாளர், ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை எஸ்.பி மற்றும் கோயில் அறங்காவலர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

#Thiruparankundram #SupremeCourt #KarthigaiDeepam #Madurai #CRPF #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive

5

“தவெக எம்.எல்.ஏ. மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை!” – சென்னை உயர் நீதிமன்றம்!

November 27, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான பெண் அதிகாரி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை

ba

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம்

November 27, 2026
mul11

முல்லைத்தீவு கடற்கரையில் உணர்வு எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் 2026

November 27, 2026
ther

தேராவில் துயிலுமில்லம்…

November 27, 2026
iranai

இரணைப்பாலை துயிலுமில்ல மா வீ ர ர் நாள் நினைவேந்தல்

November 27, 2026
4

“திமுக எம்.எல்.ஏ மீது பெண் அதிகாரி புகார்; திமுக எடுத்த நடவடிக்கை என்ன?” – அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி!

November 27, 2026

சென்னை: திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது பெண் அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ள நிலையில், அவர் மீது திமுக

thondama

தொண்டமானாற்று சந்தியில் மாவீரர் நினைவேந்தல்

November 27, 2026
photo-collage.png (5)

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நினைவேந்தல்!

November 27, 2026

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் 27.11.2026இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. இந்த மாவீரர் நாள் நினைவேந்தலில்

ta

சாவகச்சேரியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சகோதரர் பொதுச்சுடரினை ஏற்றியபோது…

November 27, 2026

சாவகச்சேரி நகரில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் நிகழ்வில் சுப.தமிழ்ச்செல்வனின் மூத்த சகோதரர் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்.

3

“முதல்வர் விஜய் பெரம்பூர் வெற்றிக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம்!” – உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

November 27, 2026

சென்னை: பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்த

925878213_3449952981853628_6997797706182114771_n

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இன்று மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது!

November 27, 2026

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இன்று மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது! 🕯️🌺 தாயக விடியலுக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த

2

“தொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை!” – மு.க.ஸ்டாலின் உறுதி!

November 27, 2026

சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இந்த விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே