திமுக – காங்கிரஸ் கூட்டணி கை கொடுக்குமா? காலை வாருமா காங்கிரஸ்?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னமும் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டாகப் போட்டியிட்டு வென்று கடந்த ஐந்தாண்டுகளாக ஒரே அணியாகச் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென மாணிக்கம் தாகூர் போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள், அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று குரல் எழுப்பினர்.

இதனால், உறுதியாக இருப்பதாகக் கருதப்பட்ட திமுக கூட்டணியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. என்றாலும், இதுபற்றித் திமுக தலைவர்கள் யாரும் பெரிதாக எதிர்வினையாற்றவில்லை.

கூட்டணி நீடிக்குமா அல்லது கழன்று விடுமா என்ற சூழலில் கடந்த டிச. 3 ஆம் தேதி தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழு திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து கூட்டணி இன்னும் வலுவாகத்தான் இருக்கின்றது என உறுதிப்படுத்தியிருந்தனர்.

இதனிடையே, ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் தமிழ்நாட்டுக்கு ஆகாது எனத் திட்டவட்டமாக நிகழ்ச்சியொன்றில் கூறிவிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாத காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்னால் செய்யும் இதுபோன்ற ‘ஸ்டண்ட்கள்’ கடும் பின்னடைவையே கொடுத்திருக்கின்றன. இந்தப் போக்கால் காங்கிரஸ் மட்டுமின்றிக் கூட்டணிக் கட்சிகளும் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கின்றன.

மத்தியில் ஆட்சியைப் பறிகொடுத்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், மக்களவைத் தேர்தலிலும் இதேபோன்ற வேலைகளை காங்கிரஸ் செய்திருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைந்தும் அப்போதும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏற்பட்ட தொகுதிப் பங்கீட்டு பிரச்சினையால், ‘நீ உன் வேலையைப் பார்; நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ எனத் தனியாக வேட்பாளர்களை அறிவித்து தனது ஸ்டைலில் போட்டியிட்டு வென்றார் முதல்வர் மமதா. மேற்கு வங்கத்தில் திரிணமூல் 29 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே ஆறுதல் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை காங்கிரஸ் – திமுக இடையிலான தேர்தல் கூட்டணி நீண்ட காலமாக நீடித்து வருகிறது. 2004 ஆம் ஆண்டில் துவங்கி 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை காங்கிரஸும் திமுக-வும் ஒன்றாகவே இணைந்து போட்டியிட்டன.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு, அத்தனை இடங்களிலும் தோற்றது.

பிறகு, 2016 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து இரு கட்சிகளும் இணைந்தே தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. இதுவரை கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, பொதுக்கூட்டம், இளைஞர் அணி மாநாடு, மகளிர் மாநாடு என எதையாவது கூட்டி பார்த்திருக்கிறோமா? தேர்தல் வந்தால் ஏதாவது ஒரு கூட்டணியில் பல்வேறு இழுபறிக்குப் பின்னர் தேர்தலை வேண்டா வெறுப்பாக சந்திப்பதைத்தான் காண முடிகிறது.

அதேவேளையில், ‘இறுமாப்புடன் இருநூறு வெல்வோம்’ எனத் தொடர்ந்து கூறிவரும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்கவும், கூட்டணிக் கட்சிகளுக்கு இரட்டை இலக்கத்தில் அதிக இடங்களை ஒதுக்கிவிட்டால் பெரும்பான்மைக்கு சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இழுபறி தொடர்ந்து வருகிறது.

கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் 173 இடங்களில் போட்டியிட்டு 133 இடங்களில் மட்டும் திமுக வென்றது. 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களை வென்றது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைந்த பின்னரும் அதிமுகவுக்கான தனி செல்வாக்கு தொடர்ந்தாலும் பாஜகவுக்கு எதிரான மனநிலை, அதிமுகவுக்கான பின்னடைவாகக் கூறப்படுகிறது. அதிமுக – பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறக் கூடிய வலுவான கூட்டணியாக திமுக – காங்கிரஸ் கூட்டணி கருதப்படுகிறது.

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்

se

வர்த்தகத்தில் கனடா ‘மிக மோசமான உத்தியைக்’ கொண்டுள்ளது: அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் சாடல்

April 18, 2026

வாஷிங்டனில் நடைபெற்ற ‘செமாஃபோர் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில்’ (Semaphore World Economy summit) உரையாற்றிய அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட்

tru

ஈரானின் யுரேனியத்தை அமெரிக்கா எப்படியாவது கைப்பற்றும் – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அமெரிக்கா “ஏதாவது ஒரு வழியில்” கைப்பற்றும் என்று