சென்னை:
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் அரசியல் இழுபறிக்கு இடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க திமுக எந்த விதத்திலும் இடையூறு செய்யாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆட்சியைப் பிடிக்க அதிமுக-வும் திமுக-வும் ரகசியமாக கை கோர்த்துள்ளதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதைத் தவிடுபொடியாக்கும் வகையில் ஸ்டாலினின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது. “விஜய் தலைமையிலான அரசு அமைய 6 மாதங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் கவனிப்போம். திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களைத் தவெக அரசு தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, திமுக வழங்கிய மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்” என அவர் கூறியுள்ளார். மேலும், தவெக அளித்த 6 இலவச சிலிண்டர் வாக்குறுதி மீது சந்தேகம் இருந்தாலும், அதை நிறைவேற்றினால் மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்புச் சட்டச் சிக்கல் ஏற்படுவதையோ அல்லது உடனடியாக மீண்டும் ஒரு தேர்தல் வருவதையோ திமுக விரும்பவில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளதால், விஜய்யின் பதவியேற்புக்கான அரசியல் முட்டுக்கட்டைகள் அகலத் தொடங்கியுள்ளன.
#MKStalin #Vijay #TVK #DMKSupport #BreakingNews #May7 #TamilNaduPolitics #VijayAsCM #ThalapathyVijay #NewGovernment #PoliticalStability #StalinInterview #NoInterruption #TNAssemblyUpdate #ElectionResults2026 #DravidianPolitics #ChangeInTN #VijayMakkalIyakkam #TamilNews #StalinStatement_