‘சென்னை:
டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் நாராயணாவை தவெக அரசு நியமித்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் திரைப்படத் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாவை, தமிழர் அல்லாதவர் மற்றும் காவிரி விவகாரத்தில் மோதலில் உள்ள கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்ற காரணங்களைக் காட்டி சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தமிழர்களை இழிவுபடுத்தும் செயல் என்றும், அதிகார முறைகேடு என்றும் அவர் சாடியுள்ளார்.
தமிழர்களின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் நலனையும் டெல்லியில் முன்னிறுத்த ஒரு தமிழரே தகுதியானவர் என்று கூறியுள்ள சீமான், உடனடியாக இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.