தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்த மே மாதத்தில் மஹிந்தவை ஆணைக்குழுவுக்கு அழைத்தது தவறு!

மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் உள்ளங்களை கொள்ளையடித்தாரே தவிர திறைசேரியை கொள்ளையடிக்கவில்லை. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்த மே மாதத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஆணைக்குழுவுக்கு அழைத்தமை முற்றிலும் தவறானது. தேசியத்துக்காக குரல் கொடுக்கும் மக்கள் இதற்கு வெகுவிரைவில் பதிலளிப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்தார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையாகியிருந்த நிலையில் அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆணைக்குழுவின் முன்பாக ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரச நிதியை கொள்ளையடித்ததாக குற்றஞ்சாட்டியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார். மஹிந்த ராஜபக்ஷ மக்கள் உள்ளங்களை கொள்ளையடித்தாரே தவிர, திறைசேரியை கொள்ளையடிக்கவில்லை என்பதை அரசாங்கத்துக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் மீது நம்பிக்கையில்லை. அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே ஆணைக்குழு செயற்படுகிறது. இந்த அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி கொள்வனவு மோசடி, திறைசேரியின் 2.5 மில்லியன் மோசடி உட்பட பல மோசடிகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

பிரபாகரனை அழித்த மே மாதத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஆணைக்குழுவுக்கு அழைத்தமை முற்றிலும் தவறானது.தேசியத்துக்காக குரல் கொடுக்கும் மக்கள் இதற்கு வெகுவிரைவில் பதிலளிப்பார்கள். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்துக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இன்றும் நிதி வழங்குகிறது.

புலிகள் அமைப்பின் நோக்கத்துக்கு அமைவாக அரசாங்கம் செயற்படுவதால் சிலை வைத்து கௌரவிக்கப்பட வேண்டிய மஹிந்த ராஜபக்ஷ அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தப்படுகிறது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிப்பெறாது என்றார்.

Raj

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் அம்பமாகும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரங்கள்…

May 14, 2026

தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்சம் ஒழிப்பு

Shani

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம்

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)

6ORIASPXUVDQTPFKTFQZZ5VA7U

ஸ்கார்பரோவில் சோகம்: இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றதாகத் தாய் மீது கொலைக் குற்றம்

May 14, 2026

னடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், தனது இரண்டு வயது பூர்த்தியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஒரு பெண்

65ZVLLNBG5GHNHIV3BZUWPIZBM

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

May 14, 2026

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional

Mythri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீதும் நிதி மோசடி வழக்கு; அபராதம் தொடர்பில் அறிக்கை கோரல்

May 14, 2026

கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு

canada courts

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பகிர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

May 14, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கைவசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றைப் பரிமாற்றம்

kan

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த