திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவில் விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய, உப்புவெளி பொலிஸார் குறித்த பெண்ணைக் கைது
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணமும், 150 போதைப்பொருள் மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, அவரை ஒரு வார காலம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.