தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இத்தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜனதா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவிய சூழலில், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ மற்றும் சீமானின் ‘நாம் தமிழர் கட்சி’ ஆகியவையும் களம் கண்டன.

இதுதவிர, டாக்டர் ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் இணைந்து ஒரு கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டனர். இருப்பினும், களத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய கட்சிகளுக்கிடையேதான் கடும் போட்டி நிலவியது. 234 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 4,023 பேர் போட்டியிட்டனர். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்தச் சூழலில், பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ அதிரடியாக முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், த.வெ.க. தற்போது 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, கட்சி ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது நடிகர் விஜய்தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். வாக்கு எண்ணிக்கை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், தற்போதைய நிலவரப்படி ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வருவது தமிழக அரசியலில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. உருவெடுத்துள்ளது.

amma_Mu

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி