சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் நாளை (மே 4, திங்கட்கிழமை) வெளியாக உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் முதன்முறையாகக் களமிறங்கியுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில், மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது நாளை மதியத்திற்குள் தெரிந்துவிடும்.
தமிழகம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் நாளை காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணுவதுடன் பணிகள் தொடங்கும். அதனைத் தொடர்ந்து 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 234 தொகுதிகளுக்கும் சேர்த்து 3,324 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 18,000 போலீசார் வாக்கு எண்ணும் மையங்களிலும், மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல்முறையாக ‘கியூ.ஆர். கோடு’ (QR Code) அடிப்படையிலான அடையாள அட்டைகளைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. முடிவுகளை உடனுக்குடன் results.eci.gov.in என்ற இணையதளத்திலும், ‘ECI Net’ செயலியிலும் தெரிந்துகொள்ளலாம். விஜய் தலைமையிலான தவெக ஏற்படுத்தியுள்ள தாக்கம் யாருக்குச் சாதகமாக அமையும் அல்லது யாருடைய வெற்றியைப் பாதிக்கும் என்பதுதான் தற்போதைய அரசியல் விவாதங்களின் மையப்புள்ளியாக உள்ளது.
#TNElectionResults2026 #ElectionResults #May4 #TamilNaduPolitics #Vijay #TVK #DMK #ADMK #NTK #BreakingNews #CountingDay #SecurityArrangements #ArchanaPatnaik #ThalapathyVijay #VoterVerdict #WhoWillWin #PoliticalUpdate #ChennaiNews #May3 #TNPolls2026 #VictoryDay_