தடைகளை நீக்கியருளும் விநாயகர் சதுர்த்தி விரதம் இன்று !

பிள்ளையார் பூஜை என்பது ஒருநாள் கொண்டாடும் விழாவாக மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் நமக்கு வளமும் வளமையும் தரும் ஆன்மீக பாதையை நினைவூட்டும் திருநாள் ஆகும். பிள்ளையாரின் அருளுடன் துவங்கும் வாழ்க்கைப் பயணம் எப்போதும் நன்மையிலும் வெற்றியிலும் முடியும்.

இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி விழா. தடைகளை நீக்கி, ஞானம், செல்வம், வெற்றி ஆகியவற்றை அருளும் விநாயகப் பெருமானின் பிறந்த நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. அப்படிப்பட்ட இந்த தருணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏன் கொண்டாடுகிறோம்? அதன் தாத்பரியம் என்ன? வரலாறு பற்றியும் தெரிந்துகொள்வோம்.

மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டாலும் இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழாக் கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகர்.

1893-ம் ஆண்டு “சர்வஜன கனேஷ் உத்சவ்” என்ற பெயரில் இவர் ஆரம்பித்துவைத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே இன்று வரை மக்கள் மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

புராணப்படி அரக்கர்களின் கொடுமையிலிருந்து தங்களைக் காத்திடத் தவமிருந்து, சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டதன் பயனாகத் தடைகளைத் தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர்தான் விநாயகப் பெருமான்.

இவர் ஒரு ஆவணி மாத சதுர்த்தியன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார். எனவே, அன்று முதல் இந்த தினத்தை விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

WhatsApp Image 2026-09-14 at 07.00.38

தடைகளை நீக்கியருளும் விநாயகர் சதுர்த்தி விரதம் இன்று !

September 14, 2026

பிள்ளையார் பூஜை என்பது ஒருநாள் கொண்டாடும் விழாவாக மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதும் நமக்கு வளமும் வளமையும் தரும் ஆன்மீக பாதையை

MediaFile_20260913_220352_145

அராலியில் இளைஞர் மீது வாள்வெட்டு – நால்வர் கைது

September 14, 2026

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்

cas

மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

September 14, 2026

உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் (14) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. சவூதி அரேபியாவின்

ac

விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை பலி!

September 14, 2026

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், பாலமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே

ar 2

“தமிழ் ஈழம் வேண்டும்” என்று கேட்க மாட்டேன்; எனக்கு சிங்கள மக்கள் தான் வேண்டும்! – பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்

September 14, 2026

– அனுராதபுரத்தில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்.

arr

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

September 14, 2026

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம்

u

இரு குழந்தைகளின் உயிரைப் பறித்த கைக்குண்டுத் தாக்குதல் – ஐ.நா கவலை

September 14, 2026

தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது. ஐக்கிய

Gnansa

ஞானசார தேரரைக் கைது செய்ய சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை

September 14, 2026

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலேகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது

aaa

மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும்

September 13, 2026

பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பை எடையை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு

wat

வறட்சியான வானிலை – 43,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

September 13, 2026

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

photo-collage.png

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி!

September 13, 2026

தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

image-483-edited (1)

“தனித்துப் போட்டியிட்டாலும் தவெக அரசுக்கான ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு பாதிப்பில்லை!” – பெ. சண்முகம் விளக்கம்

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்துக் களமிறங்கினாலும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து