டொராண்டோவில் இடம்பெற்ற இரண்டு பாலியல் வன்கொடுமை விசாரணைகள் தொடர்பாக தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண டொராண்டோ பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
முதலாவது சம்பவம்: மே 10, 2026 அன்று மாலை 5:30 மணியளவில் டண்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Dundas Street West) மற்றும் ப்ளூர் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Bloor Street West) பகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. வணிகக் கட்டிடம் ஒன்றிற்குள் இருந்த பெண்ணொருவரைப் பின்தொடர்ந்து அலுவலகப் பகுதிக்குள் சென்ற இனந்தெரியாத நபர், அவர் பின்னால் இருந்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் என்றும், இதில் பெண்ணிற்கு உடல் ரீதியான காயங்கள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டாவது சம்பவம்: இதற்கு முந்தைய நாள், அதாவது மே 9 இரவு 8:10 மணியளவில் டண்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Dundas Street East) மற்றும் டி கிராஸி ஸ்ட்ரீட் (De Grassi Street) அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. ஒரு குழுவாக வீதியில் நடந்து சென்ற பெண்களை அணுகிய சந்தேக நபர், ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து, பாலியல் ரீதியான வார்த்தைகளைப் பேசி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். இந்தப் பெண்ணிற்கும் உடல் ரீதியான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சந்தேக நபரின் அடையாளம்:
-
ஆண்
-
சுமார் 6 அடி 2 அங்குலம் முதல் 6 அடி 4 அங்குலம் வரை உயரம்
-
மெலிந்த உடல்வாகு
-
குட்டையான தலைமுடி
சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த ஆடைகள்:
-
கட்டம் போட்ட ஜாக்கெட் (Plaid jacket)
-
கருப்பு நிறக் காற்சட்டை
-
ஓட்டப்பந்தய காலணிகள் (Running shoes)
விசாரணையின் ஒரு பகுதியாக சந்தேக நபரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.