ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாட்டில், அதி வணக்கத்திற்குரிய, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார்.
தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஜனாதிபதி மல்வத்து மகாநாயக தேரரிடம் விளக்கியதுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.