‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்

இலங்கையின் தலைசிறந்த பேச்சாளரான முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

அவர் 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் அவருக்குச் சேரும்.

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். ஊடகவியலாளராகவும் செயல்பட்ட இராஜதுரை, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக பாராளுமன்றம் சென்றார். தொடர்ந்து 1960 மார்ச், 1960 ஜூலை, 1965 மற்றும் 1970 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.

1979 பெப்ரவரி 10ஆம் திகதி, அவர் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், அவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22ஆம் திகதி அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

1979 மார்ச் 7ஆம் திகதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் அவர் இணைந்தார்.

இதனையடுத்து, அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

அரசுப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர், சென்னையில் புலம்பெயர் வாழ்வை மேற்கொண்டு வந்த நிலையிலேயே அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு கொழும்பு சாயி மத்திய நிலையம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.அவரது இறுதிக்கிரியைகள் சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

148

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 வீடுகள் திறப்பு

November 26, 2026

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், 8.52 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 148

hari

நவம்பர் 29 இல் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகும் சாத்தியம்

November 26, 2026

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நவம்பர் 29 ஆம் திகதியளவில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை

man

மன்னாரில் இளைஞர் யுவதிகளுக்கு தலா காணி உறுதிப் பத்திரம்!

November 26, 2026

மன்னாரில் சிறுவர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்பட்டு 18 வயதைத் தாண்டிய பின்னர் அங்கிருந்து வெளியேறிய இளைஞர், யுவதிகளின்

asdas

குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இரு இத்தாலியர்கள் பலி

November 26, 2026

குவைத் மீது ஈரான் இன்று (26) நடத்திய ட்ரோன் தாக்குதலில் இத்தாலியப் பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் ANSA செய்தி

anu

எத்தகைய வேலை நிறுத்தங்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க முடியாது – ஜனாதிபதி

November 26, 2026

எத்தகைய வேலை நிறுத்தங்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு இத்தருணத்தில் தீர்வுகளை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர

d

பல மில்லியன் ஹஷிஷ் போதைப்பொருள் மீட்பு

November 26, 2026

பேலியகொடையிலுள்ள பயணிகள் சுயாதீனப் பொதிகள் களஞ்சியசாலையில் இருந்து பல மில்லியன் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருட்கள் இன்று (26) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை

7

“அண்ணா ஆரம்பித்த திமுக தில்லுமுல்லு கழகமாக மாறிவிட்டது!” – துரை வைகோ எம்.பி. குற்றச்சாட்டு!

November 26, 2026

திருச்சி: பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த திமுகவை இன்றைய தலைமை தில்லுமுல்லு கழகமாகவும், கொள்ளையர்களின் கூடாரமாகவும் மாற்றிவிட்டதாக மதிமுக எம்.பி. துரை

6

“இந்தியாவில் தங்கக் கடன் மதிப்பு ரூ.23 லட்சம் கோடியாக அதிகரிப்பு!” – தமிழ்நாடு முதலிடம்!

November 26, 2026

புதுடெல்லி: இந்தியாவில் தங்கக் கடன் சந்தை மதிப்பு ரூ.23 லட்சம் கோடியாக அதிகரித்துள்ள நிலையில், ரூ.6.9 லட்சம் கோடி நிலுவைத்

5

“ஆபத்பாந்தவனே என்று ஆளுநர் காலில் விழ திமுக தயாராகிவிட்டது!” – தவெக ஐடி விங் விமர்சனம்!

November 26, 2026

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்ததைத் தொடர்ந்து,

4

“பொது வேட்பாளரா? எவனிடமும் போய் நின்று ஆதரவு கேட்க மாட்டேன்!” – சீமான் பேச்சு!

November 26, 2026

சென்னை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் என்று கற்பனையாகச் சொல்லி வருவதாகவும், எத்தனை முறை தோற்றாலும் எவனிடமும் போய் நின்று

3

“த.வெ.க. ஆட்சி மீது நம்பிக்கை இல்லை!” – ஆளுநரைச் சந்தித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

November 26, 2026

சென்னை: த.வெ.க. ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்பதால் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்

IMG_2673

நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம்!

November 26, 2026

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான டீசல், மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல் ஆகியவை கடல்வழியாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.