செலவுகளைக் கட்டுப்படுத்தக் கடும் நடவடிக்கைகள்

அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் எரிபொருளைச் சேமிப்பதற்கும் பாகிஸ்தான் அரசு தொடர் கடும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவைப் பிரிவின் அறிவிப்பின்படி, அரசு வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருளின் அளவு 50% ஆல் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆயுதப்படைகள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் கூட்டாட்சி வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளுக்கு இந்த வரம்பு பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பின்படி, 2026/27 நிதியாண்டிற்கான மீண்டும் மீளாத செலவினங்களை வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மாதந்தோறும் 5% குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய வாகனங்கள் கொள்முதல் செய்வது மற்றும் சில பயன்பாட்டுப் பொருட்களை வாங்குவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த வரம்புகள் பொருந்தாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பின் அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் இதர தொடர்புடைய அதிகாரிகள் விமானங்களில் சாதாரண வகுப்பிலேயே (Economy class) பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்களின் கூட்டங்களை முடிந்தவரை காணொளி மாநாடு (Video Conference) முறையில் நடத்தவும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகை தரும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்து அரசு சார்பில் அதிகாரப்பூர்வ விருந்துகளை நடத்த வேண்டாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசு நிதியில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ கருத்தரங்குகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் அரசின் கேட்போர் கூடங்கள், குழு அறைகள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ வசதிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர, திருமண விழாக்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் ஒரே ஒரு வகையான உணவை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கடைகளை மூடும் நேரங்கள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, சாதாரண கடைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 9.00 மணிக்கும், விழா மண்டபங்கள் இரவு 10.00 மணிக்கும் மூடப்பட வேண்டும்.

உணவகங்கள், கேஃபேக்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் இரவு 11.00 மணி வரை திறக்கப்பட்டிருக்கலாம் என்பதுடன், பொதி (takeaway) மற்றும் வீட்டிற்கு விநியோகம் செய்யும் (home delivery) சேவைகளுக்கு இந்த நேரக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மருந்தகங்கள், வைத்தியசாலைகள், கிளினிக்குகள், மருத்துவ விநியோகக் கடைகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், மின்சார வாகன சார்ஜிங் மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட சில சேவைகளுக்கு இந்த வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தேவைப்படும் இடங்களில் தனிப்பட்ட விடயங்கள் அடிப்படையில் விலக்குகளைப் பரிசீலிக்க முடியும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை ஓரிரு நாள்களில் போய்ச் சேரும்; இதில் அரசியல் செய்ய வேண்டாம்!” – அமைச்சர் வன்னி அரசு உறுதி

September 18, 2026

விழுப்புரம்: மாவீரன் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுத் தினத்தையொட்டி திண்டிவனத்தில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த

1200-675-27660976-thumbnail-16x9-mou

தமிழ்நாட்டில் கால்பதிக்கும் அமெரிக்காவின் ‘வால்கிரீன்ஸ்’: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

September 18, 2026

சென்னை: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச முன்னணி சுகாதார மற்றும் மருந்தக சேவை நிறுவனமான ‘வால்கிரீன்ஸ்’ (Walgreens), இந்தியாவில்

Edappadi-palanisamy-smile

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 6 நாள்கள் தீவிரப் பிரச்சாரம்!

September 18, 2026

சென்னை: அடுத்த மாதம் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“பஞ்சாபில் 16 மணி நேர மின்வெட்டு; தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு இல்லை!” – அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்

September 18, 2026

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப்

photo-collage.png (1)

மயில் தோகை விரிக்கும் இந்திய விமானப்படையின் ‘சாரங்’ சாகசக் குழு!

September 18, 2026

சாரங் (Sarang) என்பது இந்திய விமானப்படையின் (IAF) புகழ்பெற்ற வான்வழி சாகச ஹெலிகாப்டர் காட்சிக் குழுவாகும். உலகிலேயே ஐந்து ஹெலிகாப்டர்களைக்

sa

சவூதி அரேபியா – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் மோதல்

September 18, 2026

சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. இந்த இருமுனைத் தாக்குதல்களில் சிறுவர்கள்

cat

புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு

September 18, 2026

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்துள்ள அந்திஸ் மலைகளும் அமேசான் படுகையும் சந்திக்கும் ‘யுங்காஸ்’ மேகக் காடுகளில், அறிவியல் உலகிற்கு

anojan

அனோஜன் விவகாரம் – இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பது என்ன?

September 18, 2026

சவுதிஅரேபியாவில் ஈழத்தமிழர் அனோஜன் சிவராஜாவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து

namal 22222222222

இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றில் நாமல் கலந்துகொள்ளவேண்டியுள்ளது- பிணை மனுவில் வேண்டுகோள்

September 18, 2026

இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றிலும் பௌத்தமத நிகழ்வொன்றிலும் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ளவேண்டியுள்ளதால் அவருக்கு பிணைவழங்கவேண்டும் என அவரது

Judment

இருவருக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

September 18, 2026

சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்

phototune.ai_1789733534

எனது மகனை உயிருடன் மீட்டு தாருங்கள் – அனோஜனின் தாயார் ஜனாதிபதிக்கு உருக்கமான வேண்டுகோள்

September 18, 2026

இஸ்லாமிய மதத்தை நிந்தித்து கருத்து பதிவு செய்தமைக்காக சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜனின் தாயார் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க

Judment

மட்டக்குளி கோர விபத்து: காரின் சாரதிக்கு விளக்கமறியல்

September 18, 2026

மட்டக்குளி பகுதியில் பல வாகனங்கள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம்