செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வு பிரித்தானிய துறைசார் நிபுணர்களின் பங்கேற்பு அவசியம் – உமா குமாரன்

இலங்கையில் மனிதப்புதைகுழிகள் விவகாரத்தில் பிரித்தானிய துறைசார் நிபுணர்களின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும், செம்மணி, மூதூர் படுகொலைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமாரன், அந்நாட்டு வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பாக யாழ் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் பிரஸ்தாபித்த உமா குமாரன், பாராளுமன்ற அமர்வில் தான் இதுபற்றி உரையாற்றியதன் பின்னர், அம்மனிதப்புதைகுழியில் இருந்து குழந்தைகள் உள்ளடங்கலாக 500 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று இவ்விவகாரத்தில் உள்நாட்டுப் பொறிமுறைகள் தொடர்ந்து தோல்வியடைந்திருக்கும் நிலையில், இம்மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை சர்வதேச கண்காணிப்பின்கீழ் கொண்டுவரவேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களும், தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் வலியுறுத்திவருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

அதேவேளை ‘மனிதப்புதைகுழிகள் பாதுகாப்பு மற்றும் விசாரணைக்கான போர்ன்மவுத் நெறிமுறை’ குறித்து விளக்கமளித்த உமா குமாரன், பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்துடன் இணைந்து போர்ன்மவுத் நெறிமுறையின் அடிப்படையில் செயற்படுவது குறித்து பரிசீலிக்குமா? என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மரபணு மாதிரிகளின் ஊடாக மனித எச்சங்கள் யாருடையவை என்பதை அடையாளங்காணும் செயன்முறைக்கு வெளியுறவு அலுவலகம் ஆதரவளிக்குமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்திருந்த வேளையில், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று ‘அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்’ (பட்டினிக்கு எதிரான இயக்கம்) அமைப்பின் 17 தன்னார்வத் தொண்டுப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் அதற்குப் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் வெளியுறவு அலுவலகத்தின் பாராளுமன்ற விவகார செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது, இலங்கையில் மனிதப்புதைகுழிகள் விவகாரத்தில் பிரித்தானிய துறைசார் நிபுணர்களின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும், மூதூர் படுகொலைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என்றும் வெளியுறவு அலுவலகத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் வலியுறுத்தினார்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக

6fe740e3-d63a-4122-8ada-4e8754dc10ee

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் “Peace Summit & Conference 2026”

October 9, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஏற்பாட்டில் “Peace Summit & Conference 2026” சர்வதேச மாநாடு

gs

கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்பு; 1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்

October 9, 2026

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி,

tru

இடைத்தேர்தலுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் இல்லை – ட்ரம்ப்

October 9, 2026

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க