சென்னை மாநகராட்சி மீது பா.ஜ., குற்றச்சாட்டு

‘சென்னை மாநகராட்சியில், 4,000 கோடி ரூபாயில் பெருமளவில் ஊழல் செய்ய வசதியாக, விதிகளை மீறி ஒப்பந்தப்புள்ளி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய வேண்டும்’ என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

சென்னை மாநகராட்சியில், தண்டையார்பேட்டை, அண்ணாநகர் மண்டலங்களில், வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணிக்கு, தனியார் நிறுவனங்களிடம் கடந்த ஜூலையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, 4,000 கோடி ரூபாய். ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கான கடைசி நாள், ஏற்கனவே நான்கு முறை தள்ளி வைக்கப்பட்டது.

இறுதியாக நவ., 20ம் தேதி மாலை, 3:00 மணி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. மூன்று நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்தன.

இந்நிலையில், விதிகளை மீறி மீண்டும் ஒரு நாள் நீட்டித்து, 21ம் தேதி கடைசி நாள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பின், மேலும் ஒரு நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ளது.

ஏற்கனவே மூன்று நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளி மதிப்பை தெரிந்து, தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைக்க சாதகமாக, இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதை அறிய முடிகிறது. ஏற்கனவே, நேரம் முடிந்த ஒப்பந்த அறிவிப்பை மீண்டும் கால நீட்டிப்பு செய்வது, விதிமீறல் மட்டுமின்றி, ஒப்பந்தத்தின் வெளிப்படை தன்மையையும் பாதிக்கும் செயல்.

இந்த விதிமீறல் காரணமாக, ஏற்கனவே ஒப்பந்தப்புள்ளி கோரிய மூன்று நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, ஒப்பந்த மதிப்பான, 4,000 கோடி ரூபாயில் பெருமளவில் ஊழல் செய்ய, விதிகளை மீ றி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

உடனே, சென்னை மாநகராட்சி, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். யார் நெருக்கடியில் கால நீட்டிப்பு செய்தது என்பது கு றித்து, முழு விசாரணை நடத்த வேண்டும். நேரம் முடிந்த பின், ஒப்பந்தப்புள் ளி கோரிய நிறுவனம் யாருடையது; அதன் பின்னணி குறித்தும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை