தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பிப்பதை ஜனாதிபதி தவிர்க்கவேண்டும் அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவேண்டும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது
சுரேஸ்சாலே தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கவேண்டும்.
சுரேஸ் சாலேயை மேலும் தாமதிக்காமல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவேண்டும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.