தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேயின் தடுப்;;புக்காவல் உத்தரவை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நீடிக்க கூடாது என சாலேயின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள சுரேஸ்சாலேயின் தாயார் மேலும் தெரிவித்துள்ளதாவது
எனது மகன் இராணுவத்தில் 37 வருடங்கள் பணியாற்றியுள்ளதுடன்இளமை காலங்களையும் பெறுமதியான வாழ்க்கையையும் குடும்பத்துடன் செலவிடமாமல் நாட்டிற்காக செலவிட்டுள்ளார்.
நான் எனது மகனிற்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறு கோரவில்லைஅவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால் ஆதாரங்களை ஆராய்ந்து உண்மையை நிலைநாட்டுங்கள்.
அதேவேளை விசாரணைகள் இடம்பெறும் வேளை ஒரு தாயாக எனது மகனின் தடுப்புக்காவல் உத்தரவை நீடிக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.
விசாரணைகள் ஆதாரங்களின் அடிப்படையில் இடம்பெறவேண்டும்அத்துடன் உங்களை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை கோருகின்றேன் என சுரேஸ்சாலேயின் தாயார்தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்