சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 பிரதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (11) நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த 25 பக்கங்கள் கொண்ட மேலதிக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2018 நவம்பர் 29 அன்று வவுணதீவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை மற்றும் 2019 ஏப்ரல் 26 அன்று சாய்ந்தமருது வீட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளைத் திட்டமிட்டு திசைதிருப்பியமை.

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவரைப் பயன்படுத்தி, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சுரேஷ் சலே அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாணந்துறைப் பகுதியில் உள்ள மற்றுமொரு புலனாய்வாளர் இவ்வாறான தாக்குதல் ஒன்று நடைபெறவுள்ளதாக முன்னரே எச்சரித்தும், புலனாய்வுப் பிரிவு அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

தாக்குதலுக்குப் பின்னர், அந்த புலனாய்வாளர் விடுதலையான போது, சுரேஷ் சலே அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து நன்றி தெரிவித்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் போது உயிரிழந்ததாகக் கூறப்படும் சாரா ஜஸ்மின் என்பவரின் உடல் பாகங்கள் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனைகளிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும், மூன்றாவது முறையும் DNA பரிசோதனை செய்யுமாறு சுரேஷ் சலே விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சுரேஷ் சலே சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த போது சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும் அவர் மலேசியாவில் இருந்தார் எனவும் குறிப்பிட்டார்.

ஏற்கனவே 25-க்கும் மேற்பட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது பக்கச்சார்பானது என தெரிவித்தார்.

சுரேஷ் சலே மிகவும் கொடூரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது மகனைப் பார்க்கக் கூட பொலிஸ் சான்றிதழ் கேட்கப்படுகிறது. சட்டத்தரணிகளுடன் அவர் பேசும் விபரங்கள் இரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன. இது அடிப்படை உரிமை மீறலாகும் என சுட்டிக்காட்டினார்.

இந்த விசாரணை அதிகாரிகள் என்ன பேசுகிறார்கள்? அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளராக இருந்த எனது கட்சிக்காரர், எவ்வாறு பாதுகாப்புச் சபையைக் கூட்டி, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்?

அரச புலனாய்வுச் சேவையும் பொலிஸ் மா அதிபரின் கீழேயே இயங்குகின்றது. நீங்கள் குறிப்பிடும் அந்த பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் அக்காலத்தில் சீருடை அணிந்துதானே கடமையாற்றினார்கள்? இது வெட்கக்கேடானது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த போது இந்த மூன்றாவது சந்தேகநபர் இலங்கையில் இருக்கவே இல்லை. அவர் மலேசியாவில் இருந்தார். அவர் 2018 ஜனவரி மாதமே இலங்கையை விட்டு வெளியேறிவிட்டார்.

அதுமட்டுமன்றி, இதுவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து 25-க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து முன்னெச்சரிக்கை தகவல் கிடைத்ததாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இப்போது யாரோ ஒருவர் புலனாய்வுப் பிரிவுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கியதாகக் கூறுகிறார்கள்.

யார் தகவல் கொடுத்திருந்தாலும், அந்தத் தகவல் கிடைத்தும் தாக்குதலைத் தடுக்கத் தவறிய அன்றைய CID அதிகாரிகள் தான் இன்றும் இந்த விசாரணைகளை வழிநடத்துகிறார்கள். அவர்கள் அன்றே தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரானை கைது செய்திருந்தால் இந்த எந்த விசாரணைகளுமே தேவையில்லையே!

இந்த ஜயகி டி அல்விஸ் அறிக்கையை வாசித்துப் பாருங்கள். இதை வாசித்தால் யார் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்பது புரியும். இவ்வாறானவர்கள் இந்த விசாரணையை முன்னெடுக்கும் போது, இது எவ்வாறு ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையாக அமைய முடியும்?

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான் இசுரு நெத்திகுமார, சுரேஷ் சலே தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் நேரடியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவை.

இந்தச் சாட்சிகள் போதுமானதா என்பதை மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

சுரேஷ் சலே தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கின் மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க மார்ச் 25ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

sale

சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள்!

March 11, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்

tha

குமார ஜயக்கொடி தொடர்பான வழக்கு தீர்ப்பினை முழு நாடும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது – தலதா அத்துகோரள

March 11, 2026

சட்டத்தின் ஆட்சி, நீதித்துறை சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நீதித்துறைக்குத் தேவையான கௌரவத்தையும் மரியாதையையும் வழங்குவது மிகவும் அவசியமானதாகும். அந்த

shi

சிறப்பு கப்பல் படை தலைமையக படகுகளுக்கான அணுகல், தேடல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் தொடர்புடைய பயிற்சி

March 11, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகத்தின் மூலம் (United Nations Office on Drugs and

ceb v

20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும் மின் கட்டணம்?

March 11, 2026

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் மின் கட்டணங்களை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்

ve

இலங்கை அகதிகள் தமிழகத்திலிருந்து நாடு திரும்புவதற்கு விசேட உதவி

March 11, 2026

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்

ch

கொழும்பில் சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய விழா!

March 11, 2026

இலங்கையின் வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக கொழும்பு சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சியும் இலக்கிய விழாவும் –

po

அமைதிக்கான அழைப்பு விடுக்கும் பாப்பரசர் லியோ

March 11, 2026

ஈரானிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் இடம்பெற்று வரும் போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் என புனித பாப்பரசர் லியோ

Judment

ஊழல் குற்றச்சாட்டு; மஹிந்தானந்தவின் மேன்முறையீடு தீர்ப்பு ஒத்திவைப்பு

March 11, 2026

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல்

ha

சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டார் பிரதமர்

March 11, 2026

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புதன்கிழமை (11)

arrest

சட்டவிரோத சொத்து சேகரிப்பு; முன்னாள் தலைமை கணக்காளர் ஒருவர் கைது

March 11, 2026

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் தலைமை கணக்காளர் ஒருவரை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு

g

சர்வதேச எரிசக்தி முகவரகம் எண்ணெய் விடுவிப்புக்கு அனுமதி

March 11, 2026

ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க

ceb

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

March 11, 2026

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (11) கைவிடப்பட்டுள்ளது. மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட