சுன்னாகத்தில் பல வருடங்களாக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மற்றும் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

சுன்னாகம் அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த கைப்பை ஒன்று களவாடப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அந்த வகையில் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை சுன்னாகப் பொலிஸார் நேற்று கைது செய்தனர். அதன் அடிப்படையில் அவரிடம் இருந்து 5 தொலைபேசிகள், ஒரு தொகை பணம் மற்றும் 2 கிராம் 820 மில்லிகாிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பதை மீட்கப்பட்டுள்ளன.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மீட்கப்பட்ட தொலைபேசிகளில் 3 கைபேசிகள் மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் திருடப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மற்றைய கைபேசிகள் யாருடையது என தெரியவராத நிலையில் அதன் உரிமையாளர்கள் அடையாளத்தை காண்பித்து தமது பொருட்களை பெற்றுச் செல்ல முடியும் என சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிதர்சன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றம் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

an

இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய சவால் பலமான அரச சேவை இல்லாமையே – ஜனாதிபதி

October 1, 2026

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளின் தனித்துவமான சேவையைப் பாராட்டும் வகையிலான “விசிஷ்ட சேவா

d

பிள்ளையார் கோவில் பகுதியில் பௌத்த வழிபாடுகளுக்கு அழைப்பு; வவுனியாவில் சம்பவம்!

October 1, 2026

வுனியா சமளங்குளம் பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு

arr

சுன்னாகத்தில் பல வருடங்களாக திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

October 1, 2026

யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

josep

கடன் நிபந்தனைகளுக்காகவே கல்விச் சீர்திருத்தங்கள் – ஜோசப் ஸ்டாலின்

October 1, 2026

தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் மக்களின் அல்லது மாணவர்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படவில்லை என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் பெறப்பட்ட கடன் நிபந்தனைகளை

jeyha

‘பிரெஸ்ட் ஸ்ட்ரோக்’; நீச்சலில் சாதித்த சிறுவன் ரகுநாதன் ஜெய்ஹரி

September 30, 2026

கொழும்பில் வசிக்கும் ரகுநாதன் – லக்ஷ்மி தம்பதியரின் 6 வயது மகன் ஜெய்ஹரி, நீச்சலில் புதிய உலக சாதனை படைத்து

ind

இஸ்ரேல்; விமானி மீது உதவி விமானி தாக்குதல்

September 30, 2026

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய் (flydubai – FZ1073) விமானத்தின் உதவி விமானி,

f

சட்டவிரோதமாக வெடிமருந்து பயன்படுத்தி மீன்பிடிப்பு!

September 30, 2026

மன்னார், சௌத்பார் உப்பு நீரேரி பகுதியில் வெடி மருந்துகளை பயன்படுத்தி மீன் பிடித்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

jail

PickMe சாரதி போல் நடித்த ’யக்கல நாமலின்’ கூட்டாளிகள் இருவர் கைது

September 30, 2026

PickMe செயலியின் வாடகை முச்சக்கர வண்டிச் சாரதி போல் நடித்து, நாவலப்பிட்டி, கினிகத்தேனை, கம்பளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஹெரோயின்

dsdds

சட்டத்தை விட பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான பலமான உறவே போதைப் பேரழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்!

September 30, 2026

சட்டத்தை விடவும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான பலமான உறவு மூலமே போதைப்பொருள் பேரழிவில் இருந்து பிள்ளைகளைக் காப்பாற்ற முடியும்

may

மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம்

September 30, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டம் நேற்று

Untitled

தானியங்கி ட்ரோன்களை நீருக்கடியில் இயக்கி சீனா கின்னஸ் சாதனை

September 30, 2026

நீச்சல் குளத்தில் நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய ரோபோக்களை ஒரே நேரத்தில் இயக்கி, அதிக எண்ணிக்கையிலான தன்னாட்சி தானியங்கி

Mid photos new.00_00_55_10.Still115

“அதிமுக இப்போது திமுகவின் கிளைக் கழகமாக மாறிவிட்டது!” – எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்!

September 30, 2026

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக் கழகமாகவே மாறிவிட்டதாகத் தமிழக முதலமைச்சர்