சுகாதார அமைச்சின் முறையற்ற நிர்வாகம்; வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளிகள் அவதி!

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நெருக்கடிக்கு சுகாதார அமைச்சின் முறையற்ற நிர்வாகமே பிரதான காரணம். அரசாங்கம் தனது கட்சிக்கு ஆதரவான வைத்தியர்களை தொழிற்சங்கங்களுக்குள் புகுத்தி, சுகாதாரத்துறையைத் தனது முழுமையான அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது என மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஜீவ குற்றம் சுமத்தியுள்ளார்.

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்புத் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (2) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நீண்ட காலமாகியும் இதுவரை முறையான தேசிய சுகாதாரக் கொள்கையையோ அல்லது மருந்துக் கொள்கையையோ அறிவிக்கவில்லை. சுகாதார அமைச்சின் உயர் பதவிகளில் இன்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிகாரிகளே பணியாற்றி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் முறையற்ற மருந்து கொள்முதல் மற்றும் விலைமனு கோரல் மோசடிகளுக்குத் துணைபோன அதிகாரிகளே தற்போதைய அமைச்சரின் கீழும் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர்.

அமைச்சருக்கும் பிரதி அமைச்சருக்கும் இத்துறை சார்ந்த ஆழமான புரிதல் இல்லை. மோசடிக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ளனர். வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நெருக்கடிக்கு சுகாதார அமைச்சின் முறையற்ற நிர்வாகமே பிரதான காரணமாகும். அரசாங்கம் தனது கட்சிக்கு ஆதரவான வைத்தியர்களை தொழிற்சங்கங்களுக்குள் புகுத்தி, சுகாதாரத்துறையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. உண்மையான பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாட ஜனாதிபதியும் சுகாதார அமைச்சரும் தயக்கம் தெரிவிக்கின்றனர்.

தமக்குச் சாதகமான சிறிய குழுக்களுடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும் காணமுடிகிறது. அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் மருந்தகங்களில் மருந்து விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை நோயாளர்களே பாதிக்கப்படுகின்றனர். ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடுவது அவசியம். இல்லையெனில், சுகாதாரத்துறை முழுமையாகச் செயலிழக்கும் நிலைக்குத் தள்ளப்படும். அரசியல் உள்நோக்கத்துடன் வைத்தியர்களையும் நோயாளர்களையும் மோதவிடுவதை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றார்.

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்

keerthana-4-2026-05-14-06-26-38

“நானும் ஒரு மாற்றுத்திறனாளியின் மகள்தான்!” – சர்ச்சைப் பேச்சுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா உருக்கமான மன்னிப்பு!

May 14, 2026

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்துத் தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ்

amulmilkhike-1778683475

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்; பொதுமக்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அமுல் பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி குஜராத் கூட்டுறவு பால்

arrest-1

நீதிமன்ற வளாகப் படுகொலை: ஆயுதங்களை வழங்கிய சந்தேகநபர் கம்பஹாவில் கைது

May 14, 2026

பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார் சமரரத்ன (Ganemulla Sanjeewa) படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கியதாகக்