இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 3,966 குடும்பங்களைச் சேர்ந்த 14,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 312 வீடுகள் பகுதிளவில் சேதமடைந்துள்ளன.
இரத்தினபுரி, கொழும்பு, மன்னார் மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 தற்காலிக நிவாரண முகாம்களில் 181 குடும்பங்களைச் சேர்ந்த 554 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் முப்படையினர் மற்றும் பொலிஸார் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அர்னாப் (Arnab) புயல் நாளைய தினம் (28) முற்பகல் 11.30 மணியளவில் இந்திய நிலப்பரப்பை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.