சானி அபேசேகரவுக்கு எதிரான விசாரணை ஆவணங்களை மறைக்க திலிப பீரிஸ் அறிவுறுத்தியுள்ளார் – உதய கம்மன்பில பகிரங்க குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சானி அபேசேகரவுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணை ஆவணங்களை மறைத்து வைக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், சி.ஐ.டியின் பிரதானி சானி அபேசேகரவுக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தவுடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு நியமனங்களை வழங்குமாறு கத்தோலிக்க சபை குறிப்பிட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட கருத்தை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி மறுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்தவுடன் அதுவரையில் விசாரணைகளை மேற்கொண்ட  அதிகாரிகள் மாற்றியமைக்கப்பட்டார்கள். அவர்களை மீண்டும் நியமிக்குமாறு குறிப்பிட்டோமே தவிர, சானி அபேசேகரவையும், ரவி செனவிரத்னவையும் நியமிக்குமாறு பெயர் குறிப்பிட்டுக் குறிப்பிடவில்லை என்று சிறில் காமினி குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சானி அபேசகர, ரவி செனவிரத்ன ஆகியோரையே கோட்டபய ராஜபக்‌ஷ இடமாற்றம் செய்தார். முன்னர் விசாரணைகளை மேற்கொண்டவர்களை நியமிக்குமாறு கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. பெயர் குறிப்பிடாமல் சானி அபேசேகரவையும், ரவி செனவிரத்னவையும் நியமிக்குமாறே கத்தோலிக்க சபை தற்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சானி அபேசேகரவுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யுமாறு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, சானி அபேசேகரவை பதவி நீக்கம் செய்தார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி சானி அபேசேகரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு சானி அபேசேகரவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் ஆவணங்களை மறைத்து வைக்குமாறு சானி அபேசேகரவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி சானி அபேசேகர வழங்கும் விடயங்களை தான் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிடுகிறார். இவ்விருவரும் இல்லாத ஒரு விடயத்தை இருப்பதாக காண்பிப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்றார்

GM5X5O2AZRHBXGDGI32JFBQUS4

ஸ்கார்பாரோவில் வாகன மோதலில் பாதசாரிக்கு பலத்த காயம்

June 18, 2026

புதன்கிழமை இரவு ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட பாதசாரி (Pedestrian) ஒருவர், கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

PKLTBD3BLRCR7JOENJ45P66GEI

நோர்த் யார்க்கில் வாகன விபத்து: நால்வர் காயம், ‘லைன் 6’ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

June 18, 2026

ஜூன் 18, 2026 வியாழக்கிழமை அதிகாலை நோர்த் யார்க் (North York) பகுதியில் இடம்பெற்ற ஒற்றை வாகன விபத்தைத் (Single-vehicle

Uthaya

சானி அபேசேகரவுக்கு எதிரான விசாரணை ஆவணங்களை மறைக்க திலிப பீரிஸ் அறிவுறுத்தியுள்ளார் – உதய கம்மன்பில பகிரங்க குற்றச்சாட்டு

June 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சானி அபேசேகரவுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுக்களை

gary

குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதா அல்லது நவீன குற்றவாளிகளை ஒடுக்குவதற்கான வழிமுறைகளைத் தாமதப்படுத்துவதா என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்: பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி 

June 18, 2026

குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும், நவீன குற்றவாளிகளை ஒடுக்குவதற்குத் தேவை என சட்டம் ஒழுங்கு அமுலாக்கப் பிரிவினரால் கோரப்படும் சட்ட வழிமுறைகளைத்

KJXR4CPXRNDADGRGPNODKYNRQY

இலங்கைத் தமிழர் ரொறன்ரோவில் கைது: ஹிஜாப் அணிந்த பெண்ணைத் தாக்கியதாக குற்றச்சாட்டு!

June 18, 2026

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில் உள்ள டர்ஹாம் பிராந்திய போக்குவரத்துப் பேருந்தொன்றில் (Durham Regional Transit bus)

RCVGAXMT6BFSHG3CBROI57MI34

கடமையின் போது கொல்லப்பட்ட OPP அதிகாரிக்கு மிசிசாகாவில் இறுதி அஞ்சலி நிகழ்வு

June 18, 2026

கடந்த வாரம் வடக்கு ஒன்ராறியோவில் (Northern Ontario) கடமையின் போது கொல்லப்பட்ட ஒன்ராறியோ மாகாண பொலிஸ் (OPP) அதிகாரி தருண்

toronto police333

அமெரிக்க தூதரக துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது: ரொறன்ரோ பொலிஸார் தகவல்

June 18, 2026

கடந்த மார்ச் மாதம் அமெரிக்க தூதரகத்தில் (U.S. Consulate) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த 19 வயதுடைய

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

காரணமின்றி கைது செய்ய முடியாது’ – நீதிமன்றில் கோட்டாபயவின் சட்டத்தரணி வாதம்

June 18, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி

police11

ஒரோரா கொலைச் சம்பவம்: ஆறு பேருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது

June 18, 2026

ஒரோரா கொலைச் சம்பவம்: ஆறு பேருக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது ஒரோரா, ஒன்ராறியோ (AURORA, ON)

police 15

கல்பிட்டியில் பொலிஸார் – விமானப் படையினரிடையே மோதல் : விசாரணை ஆரம்பம்

June 18, 2026

கல்பிட்டி கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையொன்றின் போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் இலங்கை விமானப் படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான

court-judge-hammer-gavel-696x398

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

June 18, 2026

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகள் நிமித்தம் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும்

722754513_1009596868216954_8526706588502068281_n

மணல் கிரவல், அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் .

June 18, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் மணல், கிரவல் அகழ்வு மற்றும் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கெளரவ